திரைப்பட இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் சிறந்த இயக்குனர் மட்டுமல்லாது திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களையும் இவர் இயக்கி வருகிறார்.
தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். நடிகர் அஜித்திற்கு தல எனும் பெயரை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.
நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இவர் இயக்கிய ரமணா திரைப்படம் ஆகும். அத்திரைப்படத்தில் வரும் காட்சிகளும், புரட்சிகரமான கருத்துக்களும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
அப்படத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருதையும் இவர் பெற்றார். இத்திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் மீண்டும் படமாக்கப்பட்டது. இயக்குனராக மட்டுமல்லாது ஒரு நடிகராகவும் இவர் தன் திறமையை காட்டி வருகிறார்.
அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம் திரைப் படத்தில் நடிகர் தனுஷின் நண்பராக இவர் நடித்தார். அதனைத் தொடர்ந்து மௌனகுரு, தடையறத்தாக்க, முகமூடி போன்ற திரைப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். அற்புதமான குணச்சித்திர நடிகர் என்று தி ஹிந்து பத்திரிக்கை இவரை பாராட்டியது.
செப்டம்பர் 25 ஆன இன்று பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் முருகதாஸ் அவர்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.