சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Jaffer Sadiq: திருட்டுத்தனமா ஜாபர் செஞ்ச தொழில் தெரியாதா.? ரிப்போர்ட்டரை கதிகலங்க வைத்த அமீர், லைக்காவை சொறிஞ்சுட்டாங்களே

Jaffer Sadiq: ‘ கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதை’ என்று சொல்வார்கள். அது ஜாபர் சாதிக் விஷயத்தில் சரியா போச்சு. திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கால் அடுத்தடுத்து எத்தனை பேர் மாற்றப் போகிறார்கள் என்றே தெரியவில்லை.

படம் தயாரிக்கிறதுக்கு காசு கஞ்சா மூலமா வருது, அதை வச்சு எடுக்கற படத்துல கஞ்சா விக்கிறது தப்புன்னு கருத்து சொன்னா எப்படி பாஸ் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஒரு சின்ன தீப்பொறியாக மாட்டிய விஷயம் தான் இன்று ஜாபர் சாதிக்கை உள்ளே தள்ளும் அளவுக்கு போயிருக்கிறது.

ஜாஃபர் சாதிக் மாட்டியதும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் அத்தனை பேருக்கும் சமன் அனுப்பப்பட்டது. இதில் முக்கியமாக சிக்கியவர் தான் திரைப்பட இயக்குனர் அமீர். இந்த வழக்குக்கு பத்து நாளுக்கு முன்பு வரை பருத்திவீரன் பஞ்சாயத்து பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால் அதை அப்படியே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்த கஞ்சா வழக்கு தலை எடுத்து ஆட ஆரம்பித்து விட்டது. அமீருக்கு இது சோதனை காலம் என்றுதான் சொல்ல வேண்டும். நிறைய வழக்கு விசாரணைகளையும் அவர் சந்தித்து வருகிறார்.

ஜாபர் சாதிக் தனக்கு நெருங்கிய நண்பர் என்று பல மேடைகளில் அமீர் சொல்லி இருக்கிறார். எப்போதுமே உன் நண்பனை பத்தி சொல்லு, நீ யாருன்னு சொல்லிடுறேன்னு சொல்லுவாங்க. அப்படி இருக்கும்போது நெருங்கிய நண்பர் ஒருவர் கஞ்சா தொழில் செய்து வருகிறார் என்பது அமீருக்கு தெரியாது என்பதுதான் சந்தேகத்தை கிளப்புகிறது.

லைக்காவை சொறிஞ்சுட்டாங்களே!

இதை ஒரு பத்திரிகையாளர்கள் மேடையில் அமீரிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அமீர் சொன்ன பதில் தான் ஒரு நிமிஷம் எல்லாரையுமே தலைசுற்ற வைத்து விட்டது. அமீரிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர், உங்கள் நண்பர் கஞ்சா விற்பது உங்களுக்கு தெரியாது என்று சொல்கிறீர்கள் சரி ஒத்துக் கொள்கிறோம்.

ஆனால் ஒரு நாள் கூட இவர் கையில் எப்படி இவ்வளவு காசு வருகிறது என்று நீங்கள் யோசித்ததே கிடையாதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன அமீர் ஜாபர் சாதிக் பற்றி பேசாமல், இந்த கேள்வியை நீங்கள் லைக்கா ஓனர் சுபாஷ்கரனிடம் கேட்பீர்களா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த பத்திரிகையாளர் ஜாபர் சாதிக் வழக்கு தானே இப்போது பெரிய விஷயமாக இருக்கிறது அதனால் தான் உங்களை கேட்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அமீர் லைக்கா சுபாஷ்கரனுக்கு ஐரோப்பாவில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா என கொளுத்தி போட்டு இருக்கிறார்.

ஜாபர் சாதிக் பற்றி கேட்ட கேள்விக்கு லைக்கா சுபாஷ்கரனை சர்ச்சையில் இழுத்து விட்டு விட்டார் இயக்குனர் அமீர். இனி லைக்கா ஓனர் சுபாஸ்கரன் என்ன தொழில் செய்கிறார், ஐரோப்பாவில் அவருக்கு என்ன பிரச்சனை என ஆராய ஆரம்பித்து விடுவார்கள் இணையவாசிகள். இதைத்தான் கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதை என்று சொல்வார்கள் போல.

Trending News