திங்கட்கிழமை, பிப்ரவரி 24, 2025

நான் கேட்கும் மன்னிப்பு தான் டிராகன் படம்.. அஷ்வத் மாரிமுத்துவின் உருக்கமான பதிவு, கதைக்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவம் இருக்கா

Dragon: இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது வழக்கமான காலேஜ் ஸ்டுடென்ட், அடங்காத மாணவன் என்றுதான் இருக்கும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

பலரும் பிரதிபுரங்கநாதனுக்கு இப்படிப்பட்ட படம் தான் அமையும் என்று கூட தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தார்கள்.

மன்னிப்பு தான் டிராகன் படம்

இந்த நிலையில் தியேட்டருக்கு போன அத்தனை பேருக்குமே இந்த படம் மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். முதல் நாள் முதல் ஷோ முடியும் வரைக்கும் படத்தின் கதை என்ன என்று யாருக்கும் தெரியாது.

அரியர் வைக்கிறது மாஸ் இல்ல, நல்லா படிக்கிறது தான் மாஸ் என்ற கருத்தை மனதில் பதிய வைத்திருக்கிறது.

இந்த படத்தில் பிரதீப் அப்பா அம்மாவாக வருபவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து அஸ்வத் மாரிமுத்து நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பேசி இருக்கிறார்.

அதாவது நான் டாக்டராக வேண்டும் என்ற என் அப்பா அம்மாவின் கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

கல்லூரியில் அடங்காத இன்ஜினியரிங் மாணவனாக நான் இருந்தேன். இதற்கு என் அப்பா அம்மாவிடம் கேட்கும் மன்னிப்பு தான் டிராகன் படம் என்று பதிவிட்டிருக்கிறார்.

Trending News