திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சுட்டுப்போட்டாலும் நடிக்க வராது.. தயாரிப்பாளரின் மகனை விளாசிய இயக்குனர்

மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 8 தோட்டாக்கள், ஜிபி படத்தில் நடித்தவர் நடிகர் வெற்றி. இவர் பிரபல தயாரிப்பாளரின் பழனிச்சாமியின் மகன். தற்போது வெற்றி வனம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

வனம் படத்தை இயக்கியவர் ஸ்ரீகண்டன் ஆனந்த். இவர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஸ்ரீகண்டன் ஆனந்த் பல குறும்படங்களை இயக்கி விருதுகளையும் பெற்றுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த ஐடென்டிட்டி எனும் குறும்படத்தை ஸ்ரீகண்டன் இயக்கியிருந்தார். தற்போது இவர் வித்யாசமான முயற்சியால் முழு நீள படமான வனம் படத்தை உருவாக்கி உள்ளார்.

வனம் படத்தில் வெற்றி கதாநாயகனாகவும், ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் அனு சித்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். கோல்டன் ஸ்டார் புரோடக்சன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. வனம் படத்திற்கு ரான் ஈத்தன் பிண்ணனி இசையும், விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

வனம் பகுதிகளில் பாதுகாப்பு பற்றியும், பழங்குடி மக்களின் பாதுகாப்பை பற்றியும் அடிப்படையாகக் கொண்டு திரில்லர் படமாக வனம் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

புதுமுக இயக்குனராக இருந்தாலும் அந்த சாயல் சற்றும் தெரியாதவாறு வனம் படத்தை இயக்குனர் ஸ்ரீ கண்டன் ஆனந்த் எடுத்திருந்தார். இப்படத்தின் அனுபவத்தைப் பற்றி இயக்குனர் பகிர்ந்து கொண்டபோது நடிகர் வெற்றிக்கு சுட்டு போட்டாலும் நடிக்கத் தெரியவில்லை என விமர்சித்துள்ளார். மேலும் இப்படத்தை எடுத்து முடிக்க படாதபாடுபட்டு விட்டாராம்.

ஆனாலும் வெற்றி, தயாரிப்பாளர் மகன் என்று சினிமாவில் நுழைந்தாலும் அவர் நடித்த 8 தோட்டாக்கள், ஜிவி படங்கள் வெற்றியை பெற்றது. அதேபோல் வனம் படமும் பெரிய ஆர்ப்பாட்டமின்றி வெற்றியை பெற்றது. நடிகர் வெற்றி தற்போது மெமரீஸ், தீங்கிரை, ஜோதி, ரெட் சாண்டல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Trending News