திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சத்யராஜின் இந்த பிளாப் படத்தின் கதையை சுட்ட அட்லி.. ஜவானால் தலைவலியில் ஷாருக்கான்

Jawaan – Shah Rukh Khan: இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ஜவான் படம் நான்கு வருட உழைப்பிற்கு பிறகு நேற்று ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பதான் படத்திற்கு பிறகு பாலிவுட் கிங் காங் ஷாருக்கானுக்கு இந்த படமும் மாஸ் வெற்றியை கொடுத்து இருக்கிறது. இதன் மூலம் பாலிவுட் உலகத்தில் தன்னை மீண்டும் நம்பர் ஒன் ஹீரோவாக நிரூபித்திருக்கிறார்.

என்னதான் ஷாருக்கான், நயன்தாரா என பெரிய தலைகள் படத்தில் இருந்தாலும், அட்லி என்றாலே நெட்டிசன்களுக்கு, சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்த கதையாக நல்ல கன்டென்ட் கிடைத்துவிடும். அவர் எப்படி படம் எடுத்தாலும், அது எந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை என்பதை சொடுக்கு விடும் நேரத்தில் அலசி ஆராய்ந்து பங்கம் செய்து விடுவார்கள்.

Also Read:Jawan Movie Review- 4 வருட உழைப்பு, அட்லி-ஷாருக்கான் கூட்டணி ஜெயிக்குமா? மிரட்டி விட்ட ஜவான் பட முழு விமர்சனம்

அட்லி பாலிவுட் வரை சென்று விட்டார், இனி அவருடைய லெவல் வேறு என நினைத்துக் கொண்டு படம் பார்க்க சென்றவர்களுக்கு, அவர் இன்னும் பழசை மறக்கவில்லை, இப்போது இந்தியில் வடை சுட்டு இருக்கிறார் அவ்வளவு தான் என்பது போல், படத்தின் கதை மொத்தமும் தமிழ் படங்களின் கதைகளில் இருந்து சுடப்பட்டது என தெரிந்து விட்டது.

ஏற்கனவே படம் ரிலீஸ் ஆகி கொஞ்ச நேரத்தில் எல்லாம், இது கேப்டன் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் கதையில் இருந்து சுடப்பட்டது என ட்ரோல் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். தற்போது அதையும் தாண்டி, ஜவான் படத்தின் தமிழ் வெர்ஷன் என சொல்லி சத்யராஜ் நடித்த தாய்நாடு படத்தை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Also Read:Jawan Movie Review- 4 வருட உழைப்பு, அட்லி-ஷாருக்கான் கூட்டணி ஜெயிக்குமா? மிரட்டி விட்ட ஜவான் பட முழு விமர்சனம்

சத்யராஜ் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தாய் நாடு. இந்த படத்தில் எம் என் நம்பியார், ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தார்கள். இயக்குனர் அரவிந்த்ராஜ் இயக்கிய இந்த படத்தில் சத்யராஜ் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இந்த படத்தை தான் தற்போது ஜவானின் தமிழ் வர்ஷன் என்று சொல்லி வருகிறார்கள்.

படம் ஹிந்தியில் வெற்றி பெற்றாலும், தமிழ் ரிலீஸில் அடி வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜவான் படத்தை பார்க்கும் பொழுது டப்பிங் படம் பார்ப்போம் ஃபீல் தான் வருகிறது என விமர்சனங்களை சொல்லி வருகிறார்கள். தற்போது இதுவும் பத்தாது என, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படத்தின் கதையை சொல்லி இதிலிருந்து தான் அட்லி காப்பி அடித்திருக்கிறார் என ரோல் செய்வதால், படத்தின் வெற்றி பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

Also Read:பழக்க தோஷம் மாறல, தண்டவாளத்தில் ஏறிய அட்லியின் வண்டவாளம்.. விஜயகாந்தின் இந்த படம் தான் ஜவான்

Trending News