திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நயன், விக்கி போல இல்ல.. ஷார்ட்டாக மகனுக்கு பெயர் வைத்த அட்லீ

நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். மேலும் வாடகை தாய் மூலம் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். சமீபத்தில் தங்களது குழந்தைகளின் பெயரை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தனர்.

உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என மிக நீண்ட பெயரை வைத்திருந்தனர். இதைக் கேட்ட ரசிகர்கள் இந்தப் பெயரின் அர்த்தமே புரியவில்லை என்றும் இவ்வளவு நீளமாக இருப்பதாக இணையத்தில் கிண்டல் செய்து வந்தனர். அதற்கு அப்படியே நேர் எதிராக மிக சுருக்கமான பெயரை தனது மகனுக்கு அட்லீ வைத்துள்ளார்.

Also Read : எட்டு டாப் ஹீரோக்களுடன் நடித்த ரியல் லேடி சூப்பர் ஸ்டார்.. 40 வயதில் நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்கும் நடிகை

அதாவது அட்லீ சின்னத்திரை நடிகையான பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதுமட்டுமின்றி அட்லீக்கு பாலிவுட் ஸ்டாரான ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

கோலிவுட்டில் சில படங்கள் இயக்கிய நிலையிலே அட்லீக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது என கோடம்பாக்கத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு போன்ற பிரபலங்களும் நடித்து உள்ளனர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக ஜவான் படத்தில் அட்லீ பணியாற்றி வரும் நிலையில் நேற்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

Also Read : ரஜினி, விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா.. பணத்தாசையால் ஷாரூக்கானிடம் சரண்டர்!

அதன்படி செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த செய்தி ஷாருக்கான் மற்றும் அட்லீ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று தனது குழந்தையின் பெயரையும் அட்லீ மற்றும் பிரியா வெளியிட்டுள்ளனர்.

அதாவது தங்களது குழந்தைக்கு மீர் என்ற பெயரை வைத்துள்ளனர். இதை பிரியா அட்லீ தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த அட்லீ ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகிறார்கள். அதுமட்டும்இன்றி நயன்தாரா போல் மிகப் பெரிய பெயராக வைக்காமல் ஷார்ட்டாக வைத்துள்ளீர்கள் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : 4 வருடத்திலிருந்து அட்லீக்கு கிடைத்த விடிவு காலம்.. வெளியானது ஜவான் ரிலீஸ் தேதி

Trending News