ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சன் பிக்சர்ஸுக்கே தயவு காட்டாமல் அலறவிடும் அட்லி.. கண்டிஷன் போட்டு கஜானாவை நிரப்பிய தம்பி

Director Atlee: ஜவான் படத்தின் ஆயிரம் கோடி வசூல் அட்லியை உச்சாணி கொம்புக்கு கொண்டு சென்று விட்டது. அந்த தைரியத்தில் தான் இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையே அலற விட்டிருக்கிறார்.

கலாநிதி மாறன் தயாரிப்பில் அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் சமந்தா ஹீரோயின் ஆக நடிக்க இருக்கிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் இப்படத்திற்காக அட்லிக்கு அதிகபட்ச சம்பளமும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் தந்திரமாக வேறு ஒரு விஷயத்தை செய்து செக் வைத்துள்ளார்.

அட்லி காட்டில் பணமழை

அதாவது இப்படம் 500 கோடியை தாண்டி வசூலித்தால் குறிப்பிட்ட அளவு பங்கு எனக்கு தர வேண்டும் என்று அவர் கண்டிஷன் போட்டிருக்கிறாராம். பொதுவாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் யாரும் இப்படி கறார் காட்ட மாட்டார்கள்.

ஆனால் அட்லி ஜவான் கொடுத்த தைரியத்தில் இப்படி ஒரு செக் வைத்திருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சன் பிக்சர்சும் அதற்கு மறு பேச்சு பேசாமல் தலையாட்டி உள்ளனர்.

அதனால் இப்போது அட்லி காட்டில் பணமழை தான். நிச்சயம் இப்படம் 500 கோடியை தாண்டி விடும் என்பதில் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறது.

அதனாலேயே இப்படி ஒரு டீலிங்கை அவர்கள் ஓகே செய்திருக்கின்றனர். ஆக மொத்தம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் அட்லி ஜவான் போல் ஒரு சம்பவத்தை செய்ய தயாராகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Trending News