செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

எதிர்நீச்சல் சீரியல் நடிகையை துரத்தி துரத்தி அடித்த இயக்குனர் பாலா.. குணசேகரனை விட ரொம்ப கொடூரம்

தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி எல்லோருடைய ஃபேவரிட் சீரியலாக இருக்கிறது எதிர்நீச்சல் சீரியல். இந்தத் தொடரில் உள்ள கதை மக்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தாலும் அதைவிட இதில் நடிக்கும் சில கேரக்டருக்காகவே எபிசோடுகளை விடாமல் தொடர்ந்து பார்த்து வருகிற மக்களும் இருக்கிறார்கள். இதில் நடிக்கும் ஒவ்வொருவரும் அவர்களுக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்தி எதார்த்தமாக நடித்து வருகிறார்கள்.

அதில் அதிகமாக குறிப்பிட்டு சொல்லும் கேரக்டர் என்றால் குணசேகரன் உடைய கேரக்டர் தான். இதில் இவருக்கு எந்த மாதிரியான கேரக்டர் என்றால் பெண்கள் எல்லோருமே அடிமைகள் தான் ஆண்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும். அவர்கள் சமையல் செய்து கொடுக்கும் சமையல்காரியாகவும், வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியாகும் தான் இருக்க வேண்டும். மற்றபடி அவர்களுக்கு எந்தவித யோசனையும், ஆசைகளும் இருக்கக் கூடாது என்று இருக்கக்கூடியவர் தான் குணசேகரன்.

Also read: ரவிக்கை இல்ல, முதல் மரியாதை ராதா போல் போட்டோ ஷூட் நடத்திய சுந்தரி.. நெட்டிசன்களை விளாசிய சம்பவம்

இப்படிப்பட்ட இவரிடம் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டு வருகின்றனர். ஐந்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 5000 ரூபாய்க்கு நடித்து வருகிறார் ஆதி குணசேகரன். தற்போது இந்த நாடகத்தில் இவரின் தூரத்து தங்கையாக வருபவர் தான் ஜான்சி ராணி. இவரையுமே சும்மா சொல்லக்கூடாது வந்த கொஞ்ச நாட்களிலேயே ரொம்பவே பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம்.

இவருடைய உண்மையான பெயர் காயத்ரி கிருஷ்ணன். இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். அதற்கு என்ன அர்த்தம் என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கிரியேட்டிவ் விஷயங்களை அதற்கு ஏற்றவாறு ஐடியாக்களை சொல்லி அதனை மேம்படுத்தி செய்யும் பணி தான். அப்படிப்பட்ட இவர் இயக்குனர் பாலா உடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் வேலை பார்த்து வந்திருக்கிறார். பாலா கூட வேலை பாக்குறது ஒன்னும் சும்மா கிடையாது எவ்வளவு பெரிய குதிரைக்கொம்பாக இருக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

Also read: நிச்சயதார்த்தமே வியாபாரமாக மாற்றிய குணசேகரன்.. அப்பத்தா எடுக்கப் போகும் முடிவு இதுதான்

அப்படி ஒரு முறை பாலாவுடன் வேலை செய்யும் போது ஏதோ சாதாரண விஷயத்துக்கு பெரிய அளவில் கோபப்பட்டு கையில் கிடைத்ததை வைத்து இவரை அடித்திருக்கிறார். பாலா பெரிய நடிகர்களையே சும்மா விட மாட்டார் இப்படி இருக்கும் போது அவருக்கு கீழே வேலை பார்க்கும் சக ஊழியரை எந்த அளவுக்கு தாக்கியிருப்பார் என்று தெரிகிறது.

தற்போது இவர் சீரியலில் நடித்து பிரபலமானதால் சில பேர் இவரிடம் பேட்டி எடுக்க சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அவர்கள் ஜான்சி ராணி இடம் இந்த நாடகத்தில் நடிக்கும் குணசேகரன் கேரக்டர் போலவே நிஜத்திலும் நீங்கள் யாரையாவது சந்தித்து இருக்கீங்களா என்று கேட்டிருக்கிறார்கள். அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் குணசேகரனை விட மிகவும் கொடூரமான ஆளை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்பொழுதுதான் அவர் பாலாவிடம் மாட்டிக் கொண்டு படாத பாடுபட்டதை பற்றி சொல்லி இருக்கிறார்.

Also read: கோபியை குழப்பிவிடும் அம்மா.. பதறிப் போய் பாக்யாவிடம் வாய் கொடுத்து மூக்குடைந்த ராதிகா

Trending News