Director Bala: இயக்குனர் பாலா சினிமா படங்கள் எடுப்பது மட்டுமின்றி தன்னுடைய சொந்த வாழ்க்கையிலுமே ரொம்பவும் வித்தியாசமானவர். இவர் பேசுவதை அவ்வளவு எளிதாக யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அதே போன்று தான் இவர் படங்களில் வைக்கும் கதாபாத்திரங்களும். ரொம்பவும் எதார்த்தமாக காட்டுகின்றேன் என்ற பெயரில் அந்த கேரக்டர்களை பற்றி எதுவுமே புரியாத அளவுக்கு படம் எடுத்திருப்பார்.
இவருடைய படங்கள் வித்தியாசமான கதை மற்றும், எதார்த்தமான நடிப்பினால் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதனாலேயே இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களின் ஒருவராக இருக்கிறார். தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்தாலுமே, பாலாவுக்கு ரசிகர்கள் இன்று வரை ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
Also Read:ஹீரோக்களை சாகடிக்கும் 6 இயக்குனர்கள்.. பாலா படமே வேண்டாம் என ஒதுங்கும் நிலைமை
பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த நான் கடவுள் படம் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பேசப்பட்டது. இந்த படத்தில் சிவபக்தர்களான அகோரிகளின் வாழ்க்கையை கண்முன் காட்டியிருப்பார். நிஜ வாழ்க்கையிலும் இவர் சிவபக்தர் தான். தன்னுடைய கழுத்தில் எப்பொழுதுமே ஒரு பெரிய ருத்ராட்ச மாலையும் இவர் அணிந்திருப்பார்.
பாலா படவேளைகளில் அதிகமாக பிசியாக இருந்தாலும், அடிக்கடி ராமேஸ்வரத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். அங்கு போய் ஒரு சில நாட்கள் தங்கும் பாலா, அந்த கோயிலில் அதிக நேரத்தை செலவிடுவாராம். ஆனால் பாலாவுக்கு ராமேஸ்வரத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் என்று யாருமே கிடையாதாம்.
Also Read:டைரக்டராகவும் கொடி கட்டி பறந்த மேஜர் சுந்தர்ராஜன்.. கமலை வைத்து இயக்கிய அந்த திரில்லர் மூவி
அந்த ராமேஸ்வரம் கோவிலில் பிச்சை எடுக்கும் ஒருவர் தான் அங்கு இயக்குனர் பாலாவிற்கு மனதிற்கு நெருக்கமானவராம். அவருடன் பல மணி நேரங்கள் மனம் விட்டு பேசி பொழுதை கழிப்பாராம். அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அந்த பிச்சைக்காரரை கூட்டி சென்று விடுவாராம் இயக்குனர். அந்த அளவுக்கு அவருடன் நேரம் செலவிடுவதை விரும்புவாராம்.
இது போதாது என்று அந்த கோவிலில் தனக்கு கொடுக்கப்படும் அத்தனை முதல் மரியாதைகளையும் அந்தப் பிச்சைக்காரருக்கு செய்ய சொல்லி அறிவுறுத்துவாராம் பாலா. அங்கு இருப்பவர்களுக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை என்றாலும் பாலாவுக்காக சகித்துக் கொண்டு அதை செய்கிறார்களாம். உண்மையிலேயே பாலாவின் இந்த குணம் பெரியாரைத் தான் ஞாபகப்படுத்துகிறது.
Also Read:பிரபலங்களின் மார்க்கெட்டை காலி செய்த 5 விஷ பூச்சிகள்.. ஆல் அட்ரஸே காணாமல் போன மைக் மோகன்