திங்கட்கிழமை, பிப்ரவரி 24, 2025

எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்திய பாலா.. சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்த நடிகை

இயக்குனர் பாலா தன் படங்களில் எல்லாம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுப்பார். அதுமட்டுமல்லாமல் நடிகர், நடிகைகள் இடமிருந்து எவ்வாறு சிறந்த நடிப்பை வாங்குவதில் வல்லவர் பாலா. அவ்வாறு நடிகர் நடிகைகளை அதட்டி, உருட்டி நடிப்பை வாங்கிவிடுவார்.

சில சமயங்களில் பாலா சில நடிகர்களிடம் கை நீட்டவும் செய்துள்ளார் என்ற தகவலும் செய்தித்தாள்களில் வெளியாகியிருந்தது. ஆனால் படம் வெளியான பிறகுதான் தெரியும் பாலா ஏன் இவ்வாறு செய்தார் என்று. அந்தக் காட்சிக்கு தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல், விசில் என பறக்கும்.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை அபிதா சில வருடங்களுக்கு பின்பு மீண்டும் சீரியல்களில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் இவரது அர்ச்சனா கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. சின்னத்திரைக்கு வருவதற்குமுன் அபிதா இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில் கதாநாயகியாக நடித்துயிருந்தார். அதன் பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார்.

அதற்கான காரணத்தை பற்றி சமீபத்தில் கூறியுள்ளார். அதாவது சேது படத்தில் நடிக்கும்போது அதில் நடன காட்சி இருந்தது. ஆனால் எனக்கு அப்போது நடனம் ஆடத் தெரியாது. இதனால் கோபமடைந்த பாலா எல்லோர் முன்னிலையிலும் என்னைத் திட்டிவிட்டார். எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டேன்.

ஆனால் என் அம்மா சமாதானம் செய்த பிறகு மறுநாள் பாலாவிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். உன் நல்லதுக்கு தான் சொல்கிறேன் என பாலா கூறினார். மேலும் சேது படம் ரிலீஸாவதற்கு முன்பு எந்த படத்திலும் நடிக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு சில படங்களில் நடித்தேன்.

இதனால் கோபமடைந்த பாலா சேது படத்தின் ரிலீஸ் அப்போ பிரஸ்மீட்டில் கூட என்னை கூப்பிடவில்லை என அபிதா கூறினார். அதன் பின்பு சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் தான் நமக்கு செட்யாகும் என சின்னத்திரையில் நடிக்க தொடங்கியதாக அந்த பேட்டியில் அபிதா கூறியுள்ளார்.

Trending News