Vijay: இயக்குனர் பாலா தன்னுடைய அடுத்த படத்திற்கு வணங்கான் என்ற பெயரை சரியாகத்தான் வைத்திருக்கிறார்.
உண்மையிலேயே பாலா தான் அந்த வணங்கான். வணங்கான் என்றார் யாரையும் பார்த்து அடிபணிந்து போவதோ, வணங்குவதோ செய்யாத ஒரு ஆள்.
இதைத்தான் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாலா சொல்லி இருந்தார். உடனே தொகுப்பாளர் அப்போ அந்த வணங்கான் நீங்கதானா என்று கேட்டார்.
அது மட்டும் இல்லாமல் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் உள்ளே வந்தபோது எல்லோருமே அவரை பார்த்ததும் எழுந்து நின்றார்கள்.
விஜய்யை பார்த்து நான் ஏன் எழுந்து நிற்கணும்
ஆனால் நீங்கள் மட்டும் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தீர்கள் ஏன் என கேள்வி கேட்டார்.
உடனே இயக்குனர் பாலா நான் ஏன் விஜய்யை பார்த்ததும் எழுந்து நிற்க வேண்டும். அவர் என்னைவிட ரொம்பவும் வயதில் சின்னவர்.
அப்படி இருக்கும்போது அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதெல்லாம் தவறான விஷயம். இதை ஏன் மீடியாக்களில் அவ்வளவு பெரிதாக்கினார்கள் என்று தெரியவில்லை.
அதேபோன்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் என்னுடைய மகள் மற்றும் விஜய் அவர் குடும்பத்தோடு அமர்ந்திருந்தார். அப்போது என்னுடைய மகள் யார் என்று தெரியாமலேயே விஜய்யின் மடியில் அமர்ந்தார்.
விஜய் உடனே தன்னுடைய போனை எடுத்து செல்பி எடுக்க முயன்றார். ஆனால் அதற்கு முன்பு ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா சார் என என்னிடம் கேட்டார்.
விஜய் அவ்வளவு ஒழுக்கமான, மரியாதை தெரிந்த நபர். அப்படி இருக்கும்போது நான் எப்படி அவரை அவமானப்படுத்துவேன் என பல வருட சர்ச்சைக்கு பதில் அளித்து இருக்கிறார் இயக்குனர் பாலா.