Bala: இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால சினிமா பயணம் சமீபத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாலா இந்த படம் பிரமோஷனில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களிடம் பாலாவிடம் இருந்த கேள்வி இரண்டு தான். ஒன்று சூர்யாக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை, அடுத்து பாலாவை கவுரவிக்க விக்ரம் ஏன் வரவில்லை.
நந்தா, பிதாமகன் படங்களுக்குப் பிறகு சூர்யா பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் திடீரென்று சூர்யா அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். வளர்த்து விட்ட இயக்குனரை இப்படி பழிவாங்கிட்டாரே என பேசப்பட்டது.
ஆனால் அதற்கு தற்போது பாலா விளக்கம் அளித்து இருக்கிறார். வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகவில்லை, பாலா பேசி சமரசம் செய்து சூர்யா விலகி இருக்கிறார்.
அதாவது பாலா நினைத்தது மாதிரி பொதுவெளியில் இந்த படத்தின் படப்பிடிப்பை சூர்யாவை வைத்து எடுக்க முடியவில்லை.
சூர்யாவுக்காக சமரசம் செய்து கொண்டால் படம் அவர் நினைத்தது போல் வராது. இது குறித்து சூர்யாவிடம் பேசி இருவரும் சுமூகமாக முடிவெடுத்தது இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி இருக்கிறார்.
அதே நேரத்தில் விக்ரம் பற்றியும் வர்மா படம் பற்றியும் பாலாவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு நிமிடம் பாலா அமைதியாக இருந்திருக்கிறார்.
பின்னர் இதுதான் என்னுடைய பதில் என்றும் சொல்லி இருக்கிறார். தன்னுடைய மகனை இயக்குனர் பாலா தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விக்ரம் ஆசைப்பட்டது முதல் வர்மா படம் எல்லோருக்குமே தெரியும்.
அவர் சொல்லிய பதிலிலிருந்து சூர்யாவுடன் அவருக்கு இணக்கமான உறவு தொடர்வதையும், விக்ரமுடன் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.