வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆணவத்தில் ஆடியதால் திருப்பி செய்த கர்மா.. தன்னந்தனியாக தத்தளித்து வரும் சூர்யா பட இயக்குனர்

Actor Surya Director: பொதுவாகவே சூர்யாவுக்கு இந்த இயக்குனர் என்றால் எப்பொழுதுமே வெற்றி என்பது உறுதியானது.  இவருக்கு மட்டுமல்லாமல் இவர் எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் வெற்றி பெற வைப்பார்.  அப்படிப்பட்ட இயக்குனர் தான் பாலா.  இவர் எடுக்கக்கூடிய படங்கள் எதார்த்தமான கதையுடன் தத்துரூபமாக மக்களிடம் போய் சேர்க்க வேண்டும் என்பதில் முனைப்புடன் சுற்றுபவர். இத்தகைய திறமையுள்ள இயக்குனர் பாலாவுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அப்படிப்பட்ட இவர் கடந்து வந்த பாதைகளை பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம். அதாவது சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து சேது படத்தில் துவங்கியதில் இருந்து தற்போது எடுத்து வரும் வணங்கான் திரைப்படம் வரை பிரச்சினையை மட்டுமே சந்தித்துள்ளார். ஆனால் முன்பெல்லாம் பிரச்சனை வந்தால் அந்த படங்கள் வெற்றியடைந்து விடும் என்ற ஒரு கெத்துடன் இருப்பார்.

Also read: பாலாவின் காலில் விழுந்த பாலிவுட் நடிகை.. வட இந்தியாவில் நடந்த சம்பவம்

ஆனால் சமீப காலமாக பெரிசாக பேசும் படியான படங்கள் ஏதும் இவரிடம் இருந்து வரவில்லை. சரி சினிமா வாழ்க்கை தான் இப்படி இருக்கிறது என்றால் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அதற்கு தகுந்தார் போல் தான் இருக்கிறது. இவருடைய விவாகரத்துக்கு பிறகு தன்னந்தனியாக தான் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

இவருடைய நிலைமையை பார்த்த பின்பு தான் சூர்யா, பாலாவை கூப்பிட்டு நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி ஆரம்பித்த படம் தான் வணங்கான். ஆனால் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே சூர்யாவை ஓவராக டார்ச்சர் செய்ததால் அவர் தலை தெறிக்க ஓடிவிட்டார்.

Also read: பாலாவை மிஞ்சிய சைக்கோ இயக்குனர் இவர்தான்.. செவுளில் விட்ட அறை, வாழை மட்டையில் வாங்கிய அடி

அதன்பின் வேறு வழி இல்லாமல் வணங்கான் படத்திற்கு அருண் விஜய்யை வைத்து இவருடைய சொந்த தயாரிப்பில் சத்தமே இல்லாமல் எடுத்து வருகிறார். ஆனால் இப்படத்தை எடுப்பதற்கு யாருடன் உதவியும் இல்லாமல் படத்தை எடுத்து வருகிறாராம். இதுவரை இப்படிப்பட்ட பாலாவை யாருமே பார்த்ததில்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.

சினிமாவில் தன்னை மிஞ்சி யாரும் படம் எடுத்ததில்லை என்ற ஒரு தலைக்கனத்துடன் பல வருடங்களாக அனைவரையும் ஆட்டி படைத்திருக்கிறார். ஆனால் அப்படிப்பட்டவரின் தற்போது நிலைமை மற்றவர்கள் பார்த்து அனுதாபம் படுகிற அளவுக்கு இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஏதோ ஆர்வமே இல்லாமல் படத்தை எடுத்து வருகிறார். அட்லீஸ்ட் இந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே பழைய பாலாவாக இவரால் உருவெடுக்க முடியும்.

Also read: பாலாவை தூக்கி சாப்பிடும் மண்ட கோளாறு பிடிச்ச இயக்குனர்.. தப்பை மறைக்க சாதியை இழுத்த கேவலம்

Trending News