சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இனிமே என் ரேஞ்சே வேற.. சம்பளத்தை உயர்த்தி அட்டூழியம் செய்யும் பாலாவின் செல்லப்பிள்ளை

Bala: சர்ச்சையும் இயக்குனர் பாலாவும் பிரிக்க முடியாத ஒன்று. இவர் படம் எடுக்க இறங்கினாலே நிச்சயம் மீடியாக்களுக்கு தீனி கிடைத்துவிடும். ஆனால் இப்போது சர்ச்சையில் சிக்கியது இவரின் செல்ல பிள்ளையான அந்த ஹீரோ தான்.

பாலா இப்போது வணங்கான் படத்தில் பிஸியாக இருக்கிறார். முதலில் சூர்யாவை வைத்து அஸ்திவாரம் போட்ட இவர் தற்போது அருண் விஜய்யை வைத்து படத்தை முடித்துள்ளார்.

Arun Vijay
Bala
Suriya
GV Prakash

ஜிவி பிரகாஷ் இசையில் பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி இருவரும் தயாரித்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. அதில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலை மற்றொரு கையில் பிள்ளையார் என இருக்கும் அந்த காட்சி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

சம்பளத்தை உயர்த்திய அருண் விஜய்

அதுபோக இப்படத்திற்காக அவர் கடுமையான ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார். அதன் மூலம் அவர் பாலாவின் மனதிலும் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட்டார் என பட குழுவினர் கூறுகின்றனர்.

அதனால் தான் என்னவோ தற்போது படம் வெளிவருவதற்கு முன்பே அவர் தன்னுடைய சம்பளத்தையும் இருமடங்காக உயர்த்தி இருக்கிறார். அதன்படி தற்போது அருண் விஜய் தன்னுடைய சம்பளத்தை 8 கோடியாக அதிகப்படுத்தி விட்டாராம்.

தற்போது இவர் நான்கு கோடி தான் சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால் வணங்கான் வெளிவந்தால் என்னுடைய ரேஞ்சே வேற எனக்கூறி அடுத்த படத்திற்கு 8 கோடி சம்பளமாக கேட்பதாக கூறுகின்றனர்.

படமே ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் இப்படி அலப்பறை பண்ணுகிறாரே. இதெல்லாம் எங்க போய் முடிய போகிறதோ என இவரின் அட்டூழியத்தை பார்த்து சில இயக்குனர்கள் சத்தம் இல்லாமல் புலம்பி வருகிறார்களாம்.

வணங்கானை நம்பி இருக்கும் அருண் விஜய்

Trending News