ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தமிழ் கற்றுக் கொடுக்கிறேன் என நடிகையை காதலில் வீழ்த்திய பாக்யராஜ்.. பெண்கள் விஷயத்தில் கில்லாடிதான்!

இந்திய சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெயர் எடுத்தவர் பாக்கியராஜ். இவருடைய ஒவ்வொரு படங்களிலும் சில்மிஷம் கலந்த சிரிப்பு இருக்கும். பெண்கள் எல்லாம் எப்படி இவரது படங்கள் பார்ப்பார்கள் என்ற விமர்சனம் எழும்போதெல்லாம் இவருடைய படத்திற்கு பெண்கள் கூட்டம் அலை மோதுவதை பார்த்து அடங்கிவிடும்.

அந்த காலத்தில் அதிக பெண் ரசிகைகளை வைத்திருந்த நடிகர்களில் இவரும் ஒருவர். பாக்கியராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பாக்யராஜ் பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியிருந்தாலும் அந்த படங்களில் அவர் பயன்படுத்திய முருங்கைக்காய் தான்.

முதலில் இயக்குனராக தடம்பதித்த பாக்கியராஜ் பின்னர் ஹீரோவாகவும் பல வசூல் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். பாக்யராஜ் இயக்குனர் ஆவதற்கு முன்பே அசிஸ்டன்ட் இயக்குனராக வலம் வந்த நேரத்தில் நடிகை பிரவீணாவுக்கு தமிழ் கற்றுகொடுக்க அனுப்பப்பட்டாராம்.

ஆனால் நம்மாளு தான் பெண்கள் விசயத்தில் கில்லாடியாச்சே. பிரவீணாவை தன்னுடைய வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ். பிரவீணா பாக்யராஜுடன் பாமா ருக்மணி என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

நல்ல முறையாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நேரத்தில் திடீரென நடிகை பிரவீணாக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பாக்கியராஜ் பல மருத்துவ செலவுகளை செய்து விட்டார். இறுதியில் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

சில வருடங்கள் கழித்து பிரவீனா இறந்துவிட்டார். அதன் பிறகுதான் பாக்யராஜ் தன்னுடன் நடித்த பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை சர்ச்சை பயில்வான் சாமர்த்தியமாக தெரிவித்துள்ளார்.

actress-praveena-bhagyaraj-cinemapettai
actress-praveena-bhagyaraj-cinemapettai

Trending News