Director Bharathiraja directed best 5 thriller movies in tamil: தமிழ் சினிமாவிற்கு புதிய பரிமாணத்தை உருவாக்கிய ராஜா இந்த பாரதிராஜா. ஆறு முறை தேசிய விருது வென்றவர். தமிழ் சினிமாவிற்கு பல அறிமுகங்களை கொடுத்த இவர், கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மண்வாசனையுடன் கிராமத்து கதைகளுக்கு பேர் போன பாரதிராஜா திரில்லர் கதைகளுக்கும் தான் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபித்தார். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ஐந்து த்ரில்லர் படங்கள் இதோ,
ஒரு கைதியின் டைரி: கமல் இரு வேடங்களில் நடித்து 1985 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒரு கைதியின் டைரி. பாக்கியராஜ் திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. தன் மனைவியை கொன்றவனை பழிவாங்கும் கைதியாகவும், கைதியான தன் தந்தையை பிடிக்கும் காவலாளியாகவும் கமல் இரு வேடங்களில் நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சி நொடிக்கு நொடி பரபரப்பான திருப்பத்துடன் ரசிகர்களை கதி கலங்க வைத்தது.
கேப்டன் மகள்: பாரதிராஜாவின் இயக்கத்தில் குஷ்பூ, ராஜா, நெப்போலியன் போன்றோர் நடித்து இருந்த அதிரடி ஆக்சன் மூவி தான் கேப்டன் மகள். 80ஸ் மற்றும் 90ஸ் ல் கனவு கன்னியாக இருந்த குஷ்பூ பாரதிராஜா இயக்கத்தில் நடித்த ஒரே படம் இதுதான். பிரதமரை கொல்ல நடக்கும் சதியிலிருந்து அவரைக் காப்பாற்ற குஷ்பூவை அதிரடி நாயகியாக காண்பித்து திரைக்கதையை விறுவிறுப்புடன் அமைத்திருந்தார் பாரதிராஜா.
சிகப்பு ரோஜாக்கள்: தமிழ் சினிமா அதுவரை கண்டிராத முதல் சைக்கோ திரில்லர் கதையை திரைப்படம் ஆக்கினார். 1978 வெளிவந்த இவரது மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் 175 நாளுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு, ஹிந்தி என ரீமேக் செய்யப்பட்டது. சீனுக்கு சீன் விறுவிறுப்பு,படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வந்து ஹார்ட் அட்டாக் மட்டுமே ஏற்படுத்த தவறி இருந்தது சிகப்பு ரோஜாக்கள்.
டிக் டிக் டிக்: இப்படத்தின் காட்சிகள் மட்டும் அல்ல நிஜமாகவே பல சுவாரசியமான செய்திகளை உள்ளடக்கியது டிக் டிக் டிக் திரைப்படம். ராதா, மாதவி,சொப்னா என மூன்று அழகிகளை அவர்களுக்கு தெரியாமல் உடம்பில் வைரத்தை வைத்து கடத்தி கொலை செய்வது. படத்தின் போஸ்டரில் ஆரம்பித்த சர்ச்சை, சட்டசபை வரை கேள்வி எழுப்ப வைத்தது. பல போராட்டங்களுக்கு இடையே வெளிவந்த டிக் டிக் டிக் வசூலில் வெற்றி நடை போட்டதுடன் அந்த கால இளைஞர்களை கொண்டாட வைத்தது.
பொம்மலாட்டம்: 2008 ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன் நானா படேகர் போன்று நடித்து வெளிவந்த திரைப்படம் பொம்மலாட்டம். க்ரைம் ஸ்டோரி வகையிலான பொம்மலாட்டத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்து கதையை விறுவிறுப்பாக்கி மெருகேற்றி இருந்தார் இயக்குனர் இமயம்.
Also read: 175 நாள் ஓடிய சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிக்க மறுத்த ஹீரோ.. காரணம் கேட்டு அதிர்ந்து போன பாரதிராஜா