வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

4 வருடத்திற்கு பின் முரட்டு வில்லனை வைத்து இயக்கப் போகும் சேரன்.. பெரிய பட்ஜெட்டில் இணைந்த மெகா கூட்டணி

Director Cheran: தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட சேரன், சமீப காலமாக குணச்சித்திர நடிகராகவே நிறைய படங்களில் தோன்றுகிறார். என்னதான் இவரை நடிகராக பார்த்தாலும் வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற தேசிய விருதுகளை தட்டி தூக்கிய படங்களை கொடுத்த இவரை இயக்குனராகவே பார்க்க ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் கடைசியாக ‘திருமணம்’ படத்திற்குப் பிறகு கடந்த 4 வருடங்களாக படங்களை இயக்குவதை தவிர்த்து வந்த சேரன், இப்போது புதிய படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுவும் இந்த முறை பெரிய பட்ஜெட்டில் முரட்டு வில்லனாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகரை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார்.

Also Read: தேவையில்லாத ஆணியை பிடுங்கும் சேரன்.. வம்பை விலைகொடுத்த வாங்க சரத்துக்குமாருடன் கூட்டு

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாக்கப் போகிறது, நான் ஈ, பாகுபலி போன்ற படங்களில் முரட்டு வில்லனாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான் நடிகர் கிச்சா சுதீப்.

இவர் கன்னட திரை உலகில் முன்னணி கதாநாயகனாக பிரபலமாகி அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவரை ஹீரோவாக வைத்து சேரன் புதிய படத்தை இயக்கப் போகிறார்.

Also Read: கவின் கல்யாணம் முடிஞ்சாலும் நிம்மதியா இருக்க விட மாட்ட போல.. லாஸ்லியா போட்ட வைரல் பதிவு

பெரும்பாலும் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களையும், ஆக்சன் பெரிதும் இல்லாத சாந்தமான படங்களையும் இயக்குவதில் பெயர் போன சேரனின் படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் சப்போர்ட் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட இவர் முரட்டுத்தனமாக இருக்கக்கூடிய கிச்சா சுதீத்தை வைத்து எப்படிப்பட்ட கதைகளத்தில் படத்தை எடுக்கப் போகிறாரோ என இந்த படத்தைப் பற்றிய தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மண்டையை போட்டு பிச்சுக்கொள்கின்றனர்.

இருப்பினும் இயக்குனர் சேரன்- கிச்சா சுதீப்- சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் என மெகா கூட்டணி இணைந்திருக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பையும் விரைவில் துவங்க இருக்கின்றனர்.

Also Read: பெண்ணுக்கும், ஆணுக்கும் உள்ள நட்பை அழகாக காட்டிய 6 படங்கள்.. சேரனுக்கு தோள் கொடுக்கும் தோழனாக இருந்த நடிகை

Trending News