
Goosip : இப்போது பார்த்தால் தமிழ் சினிமாவில் நாளுக்கு ஒரு ஹீரோயின், ஹீரோ என அறிமுகமாகி வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆகின்றனர்.
அப்படிதான் வேறு துறையில் ஃபேமஸான பிரபலம் ஒருவர் அறிமுக படத்தில் நடித்து வந்தார். ஒவர் ஆட்டம் போட்ட அந்த நடிகர் இயக்குனரிடம் தனக்கு ஹீரோயினுடன் நெருக்கமான காட்சிகளை வைக்க வேண்டும் என கேட்டாராம்.
இயக்குனரும் வேறு வழி இல்லாமல் நடிகரின் சேட்டைக்கு பொறுத்துப்போய் உள்ளார். ஆனாலும் நடிகரின் ஆட்டம் குறைந்த பாடு இல்லை. படப்பிடிப்பு தளத்தில் உள்ள பெண்களிடம் சில்மிஷம் செய்திருக்கிறார்.
அறிமுக ஹீரோவை கண்டித்த இயக்குனர்
பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த இயக்குனர் நடிகரின் வாலை ஒட்ட நறுக்கி விட்டாராம். பலமுறை கண்டித்து பார்த்தும் நடிகர் கேட்ட பாடு இல்லை என்பதால் படத்திலிருந்து அவரையே தூக்கி விட்டார்.
தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டதால் இப்போது முதல் பட வாய்ப்பு அவருக்கு பரிபோய்விட்டது. இந்த விஷயம் வெளியே தெரிந்து அவரது பெயர் மோசமாகிவிட்டதாம்.
இதனால் வேறு இயக்குனர்களும் அவருக்கு பட வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள். அமுல் பேபி மாதிரி அவருக்கு ஒரு லவ்வர் இருக்கும்போதே இந்த சில்மிஷ வேளையில் இறங்கி இருக்கிறார்.