வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ட்ரெய்லர்லயே இத்தனை கெட்ட வார்த்தை, படத்தில் எவ்வளவு இருக்குமோ.. ரத்னம் ஹரி கொடுத்த விளக்கம்

Rathnam: ஹரி, விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள ரத்னம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதற்கான பிரமோஷனில் தற்போது இயக்குனர் உட்பட அனைவரும் பிஸியாக இருக்கின்றனர்.

அதில் தற்போது நடந்து முடிந்துள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் ஹரியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் முக்கியமானது ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த கெட்ட வார்த்தை பற்றிய கேள்வி தான்.

சமீபத்தில் வெளியாகி இருந்த இந்த ட்ரெய்லரில் முகம் சுளிக்க வைக்கும் வகையிலான கெட்ட வார்த்தைகள் இருந்தது. அது ஒரு பஞ்சாயத்தை கிளப்பிய நிலையில் ஹரி அதற்கான ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

ட்ரெய்லர் கிளப்பிய பஞ்சாயத்து

அதாவது இப்போது ஒருவர் கோபப்பட்டால் கெட்ட வார்த்தை வருவது இயல்புதான் என விளக்கம் கொடுத்தார். ஆனாலும் விடாத செய்தியாளர் அதை தவிர்த்திருக்கலாமே என கேட்டார்.

அதற்கு அவர் தற்போது உள்ள காலகட்டம் அப்படித்தான் இருக்கிறது. இது போன்ற வார்த்தைகளை சாதாரணமாகவே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் அநியாயத்தை கண்டால் வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் போட்டு வருத்தப்படுவதோடு கடந்து சென்று விடுகின்றனர். ஆனால் ஹீரோ அதை தட்டிக் கேட்கிறார்.

ஹரி கொடுத்த விளக்கம்

அப்போது வரும் கோபத்தின் வெளிப்பாடு தான் அது. அந்த கேரக்டராக தான் விஷால் கெட்ட வார்த்தை பேசி இருக்கிறார்.

மற்றபடி அனைவரும் இதை செய்யுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை என கூறியிருக்கிறார். மேலும் இப்படம் வழக்கமான என் படத்தைக் காட்டிலும் கொஞ்சம் வன்முறையாக தான் இருக்கும்.

ஆனால் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என ஹரி தெரிவித்துள்ளார். ஆனாலும் ட்ரெய்லர்லயே இவ்வளவு கெட்ட வார்த்தை இருக்கும்போது படத்தில் இன்னும் எவ்வளவு இருக்குமோ என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது.

Trending News