பிரபல இயக்குனர் ஒருவருக்கு முன்னணி நடிகர் சுயரூபத்தைக் காட்டியது சினிமா வட்டாரங்களில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. அதற்கு காரணம் கொடுத்த தோல்வி படம் தான் இருக்கிறார்கள்.
பேசாமல் டான்ஸ் ஆடிக் கொண்டே இருந்திருக்கலாம். டான்ஸ் ஆடுபவர்கள் பின்னாளில் ஹீரோவாக அறிமுகமாவது ஒன்றும் புதிதல்ல. அப்படி ஹீரோவானவர்தான் அந்த தாடி நடிகர்.
ஜாடியை கூட எடுப்பேன் ஆனால் தாடியை எடுக்க மாட்டேன் என அடம்பிடித்து பல படங்களில் தாடி உடனே நடித்து வந்தார். அவருக்கும் ஒரு சில வருடங்கள் நல்ல வரவேற்பு கிடைத்து மார்க்கெட்டும் இருந்தது.
அதன்பிறகு அவரது படங்கள் தொடர் தோல்விகளை சந்திக்க ஒரு கட்டத்தில் அமைதியாக இருந்தவர் ஒரு சில வருடங்கள் கழித்து இயக்குனராக உருவெடுத்தார். அவர் முன்னணி நடிகர் ஒருவரை வைத்து ரவுடிசம் கலந்த போலீஸ் படமான ரீமேக் படத்தை எடுத்தார்.
எதிர்பாராத வகையில் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து வட இந்தியா பக்கம் சென்றவர்தான். அங்கே அதே படத்தை அங்குள்ள முன்னணி நடிகர் ஒருவரை வைத்து எடுத்தார். அதுவும் சூப்பர் ஹிட். தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் உள்ள ஹிட் படங்களை எல்லாம் வட இந்தியாவில் ரீமேக் செய்து முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.
ஆனால் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்று மண்ணை கவ்வியது. அதுமட்டுமில்லாமல் அவரது இயக்கத்தின் மீது பல கேள்விகளை வைத்து நடிகருக்கும் பல ஏமாற்றங்களை கொடுத்து பலத்தை நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் கடுப்பான நடிகர், இனிமேல் படம் பண்றேன் என பாம்பே பக்கம் வந்தால் அவ்வளவுதான் என உயிர் பயத்தை காட்டி விட்டாராம். அப்போது பிளைட் ஏறி சென்னை வந்து வீட்டுக்குள் புகுந்தவர்தான், பால் பாக்கெட் வாங்க கூட வெளியில் வருவதில்லையாம்.