வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

வேட்டையன் 2 கதையை சொன்ன ஞானவேல்.. தலைவர் நினைச்சா பிரிச்சி பட்டைய கிளப்பலாம்

வேட்டையன் படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. ரஜினிக்காக ஒரு கதையை உருவாகாமல் தான் உருவாக்கிய கதையில் ரஜினியை ஞானவேல் நடிக்க வைத்துள்ளார் என அவரை படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். அதே சமயத்தில் ரஜினி படத்தில் இருக்கும் அந்த மாஸான விஷயங்கள் வேட்டையன் படத்தில் பெரிதாக இல்லை என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

என்ன இருந்தாலும் பொதுவான ரசிகர்களை இப்படம் ஈர்த்துள்ளதால் மிகப்பெரிய வெற்றியை நோக்கி வேட்டையன் நகர்ந்து வருகின்றது. தமிழ்நாட்டில் இது 100 சதவீத வெற்றி என்று சொல்லமுடியவில்லை என்றாலும், அண்டை மாநிலங்களிலும் இப்படம் லாபகரமான படமாக அமைந்திருக்கின்றது.

வேட்டையன் 2 அப்டேட் கொடுத்த ஞானவேல்

இந்த நிலையில், சமீபத்தில் படக்குழுவினர் சூப்பர்ஸ்டாரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் கூட தற்போது வைரலாகி வருகிறது. ஒரு புறம் சம்பளத்தை குறைத்துவிட்டது லைக்கா என்ற பேச்சுக்கள், மறுபுறம் இப்படியான நிகழ்வுகள் நடந்து அதெல்லாம் பொய்யாக்குகிறது.

வேட்டையன் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பேக் ஸ்டோரியை வைத்து ஒரு கதையை உருவாக்கலாம் என ஐடியா உள்ளது. அது வேட்டையன் படத்தின் prequel லாக உருவாக்கலாம் என நினைக்கின்றேன். ரஜினி இதற்கு ஓகே சொன்னால் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் தலைவர் இதற்க்கு ஒத்துக்கொள்வாரா என்பது டவுட் தான். ஏன் என்றால், அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கிறார். கூலி முடிந்ததும் ஜெயிலர் 2 இருக்கிறது. அதற்க்கு அடுத்து மாஸ் ஆன இரண்டு படங்கள் இருக்கிறது. இப்படி இருக்க, வேட்டையன் 2 எடுக்கவே இன்னும் 3 வருடமாகி விடும். அப்போது இந்த கதை எந்த அளவிற்கு ஒர்கவுட் ஆகும் என்று தெரியவில்லை.

Trending News