புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பல கோடி பிசினஸ் இருக்கும் இடத்தில் நேர்மை இருக்காது.. அஜித், விஜய்யை குத்தி காமிச்ச ஹெச்.வினோத்

இயக்குனர் ஹெச் வினோத் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். தன்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகளத்தை எடுத்துச் சொல்லி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு
இணையாக ஹெச்.வினோத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மையே.

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய இவர் அதன் பின்னர் தொடர்ந்து வலிமை மற்றும் துணிவு திரைப்படத்தை இந்த கூட்டணியிலேயே இயக்கினார். இதில் துணிவு திரைப்படம், முந்தைய இரண்டு படங்களை ஒப்பிடும்போது மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு வசூலையும் அள்ளியது.

Also Read: ஒரு வழியாக இயக்குனரை லாக் செய்த அஜித்.. AK-62க்காக லண்டனில் பரபரப்பாக நடக்கும் அடுத்த கட்ட வேலை

சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஹெச்.வினோத் மனம் திறந்து ஒரு சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதாவது சினிமாவை பொறுத்த வரைக்கும் வியாபாரம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு நேர்மை இருக்காது என்று ரொம்பவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார் ஹெச்.வினோத்.

மேலும் பேசிய இயக்குனர் ஹெச். வினோத் தமிழ்நாட்டில் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு கொடுத்த வரவேற்பை கடைசி விவசாயி திரைப்படத்திற்கு கொடுத்திருக்கலாம் என்று கூறினார். இயக்குனர் ஹெச்.வினோத்தின் இந்த வெளிப்படையான பேச்சு அரங்கத்தில் இருப்பவர்களை ரொம்பவும் ஆச்சரியத்தில் தள்ளியது என்றே சொல்லலாம்.

Also Read: தூக்கிவிட்ட இயக்குனரை கழட்டிவிட்ட அஜித்.. விஜய் அப்பாவும் விரட்டி விட்ட பரிதாபம்

தன்னுடைய சொந்த இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தின் பிசினஸ் பற்றி வினோத் பொதுமேடையில் இப்படி பேசி இருக்கிறார். மேலும் கோடிக்கணக்கில் பிசினஸ் செய்த ஒரு இயக்குனர் அதைப்பற்றி கொஞ்சமும் தலைகனம் இல்லாது தன் படத்திற்கு கொடுத்த வரவேற்பை கடைசி விவசாயி படத்திற்கு கொடுத்திருக்கலாம் என்று சொன்னது அவருடைய நேர்மையை தான் காட்டுகிறது.

இப்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களை வைத்து ஒரு படம் பண்ணினாலே மீடியா முன் ஓவராக ஆடும் இயக்குனர்கள் இருக்கும்பொழுது இயக்குனர் ஹெச்.வினோத் தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் அஜித்திற்காக இயக்கியிருந்தாலும் எந்த ஒரு பொது இடத்திலும் அல்லது மீடியா முன்பும் தேவையில்லாமல் எதுவுமே அலட்டிக் கொண்டதில்லை. இவருடைய இது போன்ற குணங்கள் தான் ரசிகர்கள் இவரை விரும்புவதற்கு காரணமாக இருக்கிறது.

Also Read: விஜய், சூர்யாவை கலாய்த்த காண்ட்ராக்டர் நேசமணி வைரல் போஸ்டர்.. லியோவுக்கு வந்த சோதனை

 

Trending News