வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட பதிப்பு.. அஜித் டைரக்டருக்கு சான்ஸ் கொடுத்த தனுஷ்

Director H.Vinoth joined Dhanush next movie because of KH233 delay : மறைந்த இயக்குனர் மனோபாலாவின் தயவால் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஹச் வினோத். பல போராட்டங்களை கடந்து அவர் இயக்கிய சதுரங்க வேட்டை, திரைத்துறையினரை தாண்டி மக்கள் அனைவரிடமும் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. எதிர்பாராத வெற்றியின் மூலம் முன்னணி இயக்குனரானார்.

தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியவர், அஜித் உடன் கைகோர்த்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கினார். கடந்த ஆண்டு வெளிவந்த துணிவு நல்லவிமர்சனங்களுடன் வசூலிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

துணிவு தந்த வெற்றியால் கமலின் KH233க்கு ஒப்பந்தமானார் ஹச் வினோத். படத்திற்கான ஸ்கிரிப்டை தயார் செய்து கமலின் கால் சீட்டுக்காக இலவு காத்த கிளியானார் ஹச் வினோத். இந்தியன் 2 மற்றும் 3, தக் லைஃப், கல்கி போன்ற பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுடன் பிசியாக உள்ள கமல், ஹச் வினோத்தை கண்டுக்காமல் போனார்.

Also read: கைவிட்ட கமலால் எச் வினோத் செய்த ராஜதந்திரம்.. திமிங்கலத்தை விட்டுட்டு 2 சுறாக்கு விரித்த வலை

ஒரு வருடமாக பொறுத்துப் பார்த்தவர்! பின்பு வெறுத்துப் போனார், அடுத்ததாக யோகி பாபுவை வைத்து திரை கதையை ரெடி பண்ணி படம் பண்ணலாம் என்று யோசித்தார். யோகிபாபுவின் கால்ஷீட் கிடைக்காமல் போகவே என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த ஹச் வினோத்திற்கு ஆபத்பாந்தவனாக அடைக்கலம் கொடுத்தார் தனுஷ்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சதுரங்க வேட்டை மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோலவே சதுரங்க வேட்டை படத்தின் பிரம்மாண்ட பதிப்பாக ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அஜித்திற்கு கூற, அஜித்தோ “நோ மீன்ஸ் நோ” சொல்லி ஓரம்கட்டி விட்டாராம். அதே கதையை தனுஷிற்கு கூறி ஒப்புதல் வாங்கிய குஷியில் உள்ளார் ஹச் வினோத். இதில் தனுஷ் முதன்முறையாக காவல்துறை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் ஹச் வினோத்.

கேப்டன் மில்லருக்கு பிறகு தனுஷ் அவர்கள், புதிதாக பான் இந்தியா படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்குப் பிறகு ஹச் வினோத்துடன் இணைய உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அதற்குள் தீரன் அதிகாரம் 2 படத்திற்கு கார்த்தி ஓகே சொன்னதால்  தீரன் அதிகாரம் 2 படத்தை முடித்து விடலாமா எனவும் யோசித்துக் கொண்டிருக்கிறார் ஹச் வினோத். KH233 தாமதத்தால் காத்து கிடந்த வினோத்திற்கு கார்த்தி, தனுஷின் படங்கள் வரிசை கட்டி கொண்டு நிற்கின்றன.

Also read: ரஜினியை காப்பி அடித்து அசிங்கப்பட்ட தனுஷ்.. புலியை பார்த்து சூடு போட்டு மாட்டிக்கொண்ட அவலம்

Trending News