வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

பாரதிராஜாவை போல் முத்திரை குத்தப்பட்ட இயக்குனர்.. சிட்டில உங்க பாச்ச பலிக்காது!

பொதுவாக கோலிவுடை பொறுத்தவரை ரசிகர்களை ஏ சென்டர் , பி சென்டர், சி சென்டர் ஆடியன்ஸ் என்று மூன்று வகையாக பிரிக்கிறார்கள். ஏ சென்டர் ஆடியன்ஸ்கள் என்றால் அவர்கள் மணிரத்தினம், ஷங்கர், பாலுமகேந்திரா, கமல்ஹாசன் படங்களை புரிந்து கொள்ளும் வகையான திரை ரசிகர்கள் என்கிறார்கள். அதாவது கலை நுணுக்கத்தை புரிந்து கொள்பவர்கள்.

பி சென்டர் ஆடியன்ஸ்கள் என்றால் இயக்குனர் பாலா, ஏ ஆர் முருகதாஸ், விஷ்ணுவர்த்தன் போன்ற இயக்குனர்களின் படங்களை விரும்பி பார்ப்பவர்கள். அதாவது எந்த கலை நுணுக்கங்களும் இல்லாத கமர்சியல் மசாலா படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள்.

Also Read: இயக்குனர் ஹரியின் சரிவுக்கு காரணம் என்ன? இதுதான் என ஓபன் ஆக போட்டுடைத்த பிரபலம்

இயக்குனர்கள் ஹரி, பேரரசு, KS ரவிக்குமார், லிங்குசாமியின் படங்கள் எல்லாம் சி சென்டர்ஸ் ஆடியன்ஸ்க்கானது. பொழுதுபோக்கிற்காக மட்டும் படம் பார்ப்பவர்கள் சி சென்டர் ஆடியன்ஸ். சில நேரங்களில் பி சென்டர் ஆடியன்ஸும் இதில் வந்துவிடுவார்கள்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இயக்குனர் ஹரி, பி மற்றும் சி சென்டர் ஆடியன்ஸ்களுக்காக மட்டும் படம் எடுப்பவர் என்ற முத்திரை அவர் மீது விழுந்துவிட்டது. ஆனால் சினிமாவை பொறுத்தவரை எந்த இயக்குனர்களும் குறிப்பிட்ட ஆடியன்ஸ் மட்டும் பார்த்தால் போதும் என்று படம் எடுப்பதில்லை.

Also Read: யானை படம் முடிந்த கையோடு மாஸ் ஹீரோவை இயக்கும் ஹரி.. அப்ப அதிரடிக்கு பஞ்சமே இருக்காது

பொதுவாக இயக்குனர்கள் பலதரப்பட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்களை எடுத்தாலும், அவர்களுக்கான ஒரு ஸ்டைல் எல்லா படத்திலேயும் வெளிப்படும். காதல், காமெடி, ஆக்சன், ரொமான்ஸ், த்ரில்லர் என எல்லா ஜானர்களையும் தொட்டுவிடும் இயக்குனர்கள் கூட அவர்களுக்கான கம்பர்ட்டபிள் என ஏதாவது ஒரு ஜானரை தான் கையில் வைத்திருப்பார்கள்.

அது போல தான் இயக்குனர் ஹரி எடுக்கும் படங்களில் எல்லாம் அவருக்கான ஒரு கம்பர்ட் வைத்திருப்பார். அவருக்கு அதிரடி மசாலா கதை தான் அதிகமாக கை கொடுக்கும். ஹரியின் படங்கள் பி, சி சென்டர் ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்து விடுவதால் ஹரிக்கு இப்படி ஒரு முத்திரை குத்தப்பட்டு இருக்கிறது.

Also Read: ஹரி விளையாடி தெறிக்கவிட்ட 5 படங்கள்.. முக்கிட்டு எடுத்த 3வது பார்ட் என்னாச்சு தெரியுமா?

- Advertisement -spot_img

Trending News