சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இளையராஜாவால் அவமானப்பட்டு அழுத இயக்குனர்.. தேசிய விருது பெற்றவருக்கு இந்த நிலைமையா!

இளையராஜாவின் இசைக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். இன்றுவரை அவரது பாடல்களை கேட்டால் தான் சிலருக்கு தூக்கமே வருகிறது. அப்படி இசையில் கொடிகட்டி பறக்கும் இளையராஜாவு இன்று வரை சினிமாவில் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக வெளிப்படையாக பேசக்கூடியவர். இதனால் பல பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமனிதன் படத்தில் இளையராஜா இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தை இளையராஜாவே தயாரிக்கிறார். இந்நிலையில் மாமனிதன் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றிருந்தார்.

இதை தொடர்ந்து நீர்பறவை, கூடல்நகர் போன்ற படங்களை சீனுராமசாமி இயக்கி உள்ளார். தற்போது மாமனிதன் படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில் இசை பணிகள் மட்டும் தற்போது நடந்து கொண்டிருக்கிறதாம். அதற்காக யுவன் மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து படத்திற்கு இசையமைத்து கொண்டிருக்கிறார்களாம்.

அப்போது சீனு ராமசாமி உள்ளே அனுமதிக்க வில்லையாம். நான் தான் இப்படத்தின் இயக்குனர் என்று வெளியே உள்ளவர்களிடம் சொன்னாலும் அவர்கள் சீனு ராமசாமியை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனராம். இதனால் மிகுந்த மன வேதனையுடன் தேம்பித் தேம்பி அழுது விட்டாராம்.

படத்தின் இயக்குனரையே உள்ளே அனுமதிக்காதற்கு காரணம் என்ன என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் ஒரு பிரபலமான தேசிய விருது வாங்கிய இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் வேதனையை தெரிவித்த வருகின்றனர்.

Trending News