வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

அட்வான்ஸ் பணத்தை ஆட்டையைப் போட்டு கதறவிடும் பாஸ் நடிகர்.. விழிபிதுங்கும் தயாரிப்பாளர்கள்.!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் தான் பாஸ் நடிகர். இவரது படங்களுக்கு தற்போது வரை நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் அந்த பிரம்மாண்ட இயக்குனர் உச்ச நடிகருடன் கைகோர்த்து வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தொடங்கினார். ஆனால் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து தடங்கல் ஏற்பட்டு வந்ததால் அந்த படம் எப்போது உருவாகும் என்றே தெரியவில்லை.

இதனால் பொறுமை இழந்த உச்ச நடிகர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதேபோல் பிரம்மாண்ட இயக்குனரும் அக்கட தேசத்து நாயகனை வைத்து மற்றொரு பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இதன் காரணமாக இவர்கள் இருவரும் மீண்டும் அந்த படத்தில் இணையும் திட்டமே இப்போதைக்கு இல்லை என கூறப்பட்டது.

படம் பாதியில் நிற்பதால் இவர்களுக்கு என்ன பிரச்னை உள்ளது. செலவழித்தது தயாரிப்பு நிறுவனம் தானே. இவர்களால் பல கோடிகளை செலவழித்த தயாரிப்பு நிறுவனம் இயக்குனருடன் முட்டி மோதி பார்த்தது. ஆனால் இயக்குனரோ அசைவதாக தெரியவில்லை. எனவே சண்டை போடுவதால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்த தயாரிப்பு தரப்பு வெள்ளை கொடியை காட்டி சமாதானம் பேசியது.

இதனால் சமாதானமடைந்த இயக்குனர் அந்த படத்தை இயக்க ஒகே சொல்லிவிட்டாராம். அவர் தற்போது பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில் ஒரே சமயத்தில் இந்த இரண்டு பிரம்மாண்ட படங்களையும் இயக்கி விடலாம் என மனக்கணக்கு போட்ட சமயத்தில் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.

அதாவது பாஸ் நடிகர் ஏற்கனவே அந்த தயாரிப்பு நிறுவனத்தற்கு சில படங்கள் நடித்து கொடுப்பதாக வாங்கிய அட்வான்ஸ் பணத்தை செலவு செய்து விட்டாராம். அதனால் உங்க பஞ்சாயத்து முடிந்தது. எனக்கு இன்னும் செட்டில்மென்ட் வரலையே நான் எப்படி நடிக்கறது என கேட்கிறாராம். இந்த நடிகரால் ஏற்கனவே கோடிகணக்கில் நஷ்டத்தை சந்தித்துள்ள தயாரிப்பு நிறுவனம் இவரின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த உள்ளதாம்.

மேலும் பணத்தை செட்டில் செய்தால் மட்டுமே பாஸ் நடிகர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பதால் நடிகருடன் சுமூகமாக செட்டில் செய்து கொள்ள தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகரின் இந்த செயலால் தயாரிப்பு நிறுவனம் சற்று அதிர்ச்சியில் உள்ளதாம்.

- Advertisement -spot_img

Trending News