ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரசிகர்களை ஓடவிட்ட லிங்குசாமியின் 5 படங்கள்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்கள்

தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிங்குசாமி படங்களின் மீது ரசிகர்களின் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும். ஏனென்றால் இவர் இயக்கிய ஆனந்தம், ரன் போன்ற ஆரம்பகால படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் அதன் பிறகு இவருடைய இயக்கத்தில் வெளியான சில படங்கள் ரசிகர்களை ஏமாற்றியது.

ஜி: 2005 ஆம் ஆண்டு அஜித்-திரிஷா இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு வசூல் ரீதியாக ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்தது. லிங்குசாமியின் ரன் படத்தை பார்த்து பிறகு அவர்மீது அதிக எதிர்பார்ப்பில் நம்பி வந்த ரசிகர்களை இந்தப்படம் மோசம் செய்தது.

அஞ்சான்: 2014 ஆம் ஆண்டு சூர்யா-சமந்தா இணைந்து நடித்த இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் சூர்யா ரவுடியாக நடித்திருந்த ராஜு பாய் கேரக்டரில் அவர் இன்னும் கொஞ்சம் மிரட்டி இருக்கலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வேட்டை: முன்னணி நடிகர்களான ஆர்யா, மாதவன் இவர்களுடன் சமீராரெட்டி, அமலா பால் ஜோடி சேர்ந்து நடித்த இந்த படத்தில் போலீஸாக கெத்து காட்டவேண்டிய மாதவனை தொடக்கத்தில் டம்மியாக லிங்குசாமி காண்பித்து இருப்பார். ஆர்யாவை நம்பியிருக்கும் மாதவனின் கதாபாத்திரம் ரசிகர்களை ஏமாற்றியது. கடைசியில் கெத்து காட்டிய மாதவன் தொடக்கத்திலிருந்தே போலீஸ் அதிகாரியாக மாஸ் காட்டியிருந்தால் படம் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

சண்டக்கோழி 2: 2005 ஆம் ஆண்டு சண்டக்கோழி படத்தின் முதல் பாகத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் இருவரையும் வைத்து இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் லிங்குசாமி, அந்த படத்தின் 2ம் பாகத்தில் சொதப்பி விட்டார். இரண்டாம் பாகத்தில் வரலட்சுமியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தாலும், விஷாலின் ஆக்சன் காட்சிகளுக்கு லிங்குசாமி கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். சண்டக்கோழி 2 படத்தை பெரும் எதிர்பார்ப்பில் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தந்தது.

தி வாரியர்: தெலுங்கு பிரபலங்களான ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியான தி வாரியர் திரைப்படம், புல்லட் பாடலால் ரிலீஸுக்கு முன்பே பிரபலமானது. கூடுதல் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் படத்தைப் பார்க்க சென்ற ரசிகர்கள் படத்தைப் பார்த்த பிறகு, 10 வருடங்களுக்கு முன்பு லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் ஆர்யா-மாதவன் அண்ணன் தம்பியாக நடித்த படத்தில் தம்பியை நீக்கிவிட்டு மாதவன் கேரக்டரை மட்டும் கொஞ்சம் மாற்றி எடுத்து, இந்தப்படத்திலும் ரசிகர்களை மோசம் செய்தார்.

இவ்வாறு இயக்குனராக லிங்குசாமி பெரும் எதிர்பார்ப்பில் வரும் ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி, படத்தை எடுத்த தயாரிப்பாளர்களின் தலையிலும் துண்டை போட வைத்தார்.

Trending News