ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

காசு இல்லாத நேரத்திலும் கை கொடுத்த லிங்குசாமி.. அப்படி என்ன செஞ்சார்?

லிங்குசாமியின் பெயரை சொன்னாலே ஒரு சிலருக்கு அவருடைய பழைய படங்கள் கண்டிப்பாக நினைவுக்கு வரும். மேலும் அவருடைய மற்ற படங்கள் அனைத்தும் சாதாரண வெற்றி அல்ல மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படங்களாக மட்டுமே அமைந்தன.

ஆனந்தம் படத்தில் ஆரம்பித்து ரன், சண்டக்கோழி, பையா என இந்த நான்கு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவர் பண்ணிய ஒரே தவறு அஞ்சான் என்ற படத்தை எடுத்தது மட்டும் தான்.

அதற்கு முன் எடுத்த ஜி படம் கூட தோல்விதான் ஆனால் அஞ்சான் ஏற்படுத்திய அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதற்கடுத்து கமலஹாசனை வைத்து படத்தை தயாரித்தது அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை இன்றுவரையிலும் மீளாமல் இருப்பது என்பதெல்லாம் தனிக்கதை.

கமலை வைத்து அவர் எடுத்த உத்தமவில்லன் அடைந்த தோல்வியை கணக்கு பண்ணி பார்த்தால் இன்னும் சில பல வருடங்களுக்கு அந்த கடனில் இருந்து மீளவே முடியாது.

lingusaamy
lingusaamy

இப்படிப்பட்ட கடனிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக உதயநிதியிடம் பண உதவி அளித்துள்ளார் அதுவும் பத்து லட்ச ரூபாய். இதனை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவர் கூறியதாவது’ கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இயக்குனர், தயாரிப்பாளர், நண்பர் லிங்குசாமி. அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை என்னிடம் இன்று வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்’. என்று கூறினார்.

கண்டிப்பாக இது அவருடைய நல்ல மனசுக்கு ஒரு எடுத்துக்காட்டு தான். அவர் நினைத்தால் இதனை வைத்து அவருடைய கடனின் வட்டியாவது அடைத்து இருக்கலாம். ஆனால் கஷ்டத்தில் இருந்தாலும் உதவும் எண்ணம் எல்லார்க்கும் கிடைக்காது.

Trending News