ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

லிங்குசாமி எடுக்கப்போகும் மறுபிரவேசம்.. வாய்ப்பு கொடுத்த அந்த 2 ஹீரோக்கள்

Lingusamy: தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன் கதைகளை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமான ஒருவர்தான் லிங்குசாமி. மாதவன், சூர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி இருந்தார். ஒரு காலகட்டத்தில் சினிமாவின் முக்கியமான இயக்குனராக இருந்த இவர், தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு குடும்ப பின்னணி கதையை எடுத்து அறிமுகமான லிங்குசாமி, அடுத்த வருடமே அதிரடி ஆக்சன் படமான ரன் படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க, அதைத்தொடர்ந்து சண்டக்கோழி, பையா, அஞ்சாதே, பீமா, வேட்டை போன்ற படங்களை இயக்கினார். இதில் சண்டக்கோழி படம் மட்டுமே அவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது.

லிங்குசாமி இயக்கிய அஞ்சாதே படம் மற்றும் தயாரித்த உத்தம வில்லன் படம் அவருக்கு பெரிய தோல்வியை கொடுத்தது. கோடிக்கணக்கில் கடனாளியும் ஆனார். சண்டக்கோழி படம் மீண்டும் கை கொடுக்கும் என்பதை நம்பி இரண்டாம் பாகத்தை எடுத்தார். அதுவும் அவருக்கு தோல்வியைத்தான் கொடுத்தது. அதைத் தொடர்ந்து வாரியர் படமும் லிங்குசாமிக்கு கை கொடுக்கவில்லை.

Also Read:இந்த 2 நடிகர்களை நடிக்க வச்சா தான் உனக்கு துட்டு.. விக்னேஷ் சிவனுக்கு செக் வைத்த லலித்

வாய்ப்புகளே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த லிங்குசாமி தன்னுடைய பையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவை எடுத்தார். ஆனால் அதற்கு பார்த்தேன் உன் வரவில்லை அவரைத் தொடர்ந்த ஆர்யாவிடமும் பேசி பார்த்தார் அவரும் தட்டிக் கழித்து விட்டார் லிங்குசாமி ஹிட் படங்கள் கொடுக்க அத்தனை ஹீரோகளும் மீண்டும் அவருடன் இணைய விரும்பவில்லை.

லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுத்த ஹீரோக்கள்:

தற்போது பையா 2 படத்திற்காக வேறொரு ஹீரோ லிங்குசாமியுடன் இணைந்து இருக்கிறார். நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இவர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் ஏற்கனவே நடித்துக் கொண்டிருக்கிறார். பையா 2 படத்திற்காக இவரைத்தான் லிங்குசாமி புக் செய்து இருக்கிறார்.

விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் சூரி தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை லிங்குசாமி கொடுக்க இருப்பதாக தெரிகிறது. லிங்குசாமிக்கு இரண்டு படங்களின் வாய்ப்புகளுமே மறுபிரவேசம் போலத்தான். இதை அவர் எப்படி உபயோகப்படுத்தப் போகிறார் என்பது இனி தான் தெரியும்.

Also Read:விஜய்யை நம்பி ஓவர் ஆட்டம் போட்ட லலித்.. எதிரியிடமே தஞ்சம் அடைந்த கொடுமை

Trending News