சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் லோகேஷ்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா? LCU-க்கு அடித்த ஜாக்பாட்

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்த குறுகிய காலத்தில் ஒரு வெற்றி இயக்குனர் என்ற கிரீடத்தை பெற்றுவிட்டார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சற்று வித்தியாசமாகவும் ஒன்றோடு ஒன்று இணைத்து கதைகளை சொல்லும் விதம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவரை வந்தடையும்.

அந்த வரிசையில் இப்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்திற்கு குறித்து வரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்திய லோகேஷ் இந்த படத்தின் சம்பளமாக 25 கோடி வாங்கி இருக்கிறார்.

Also read: லோகேஷ் அசுர வளர்ச்சிக்கு இவர்தான் காரணம்.. அவங்க இல்லனா மாநகரம் படத்தோட கேரியர் க்ளோஸ் ஆயிருக்கும்

இதைத் தொடர்ந்து லோகேஷ், லியோ படத்தை முடித்த பிறகு இவர் இயக்கத்தில் நடிப்பதற்கு ரஜினி மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி ஏற்கனவே இவர்கள் இருவரும் பேசி முடிவு செய்து விட்டார்கள். மேலும் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்திற்கு சம்பளமாக 35 கோடி வரை பேசப்பட்டுள்ளது.

இந்தப் படம் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில் அதற்குள் இவரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஹிந்தி நடிகர் சல்மான்கான் மும்மரமாக கேட்டு வருகிறார். மேலும் அந்தப் படத்தை இயக்குவதற்காக இவரின் சம்பளம் 50 கோடி என்று பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Also read: செம மாஸாக லியோ உடன் போஸ் கொடுத்த லோகேஷ்.. இணையத்தில் காட்டு தீயாக பரவும் புகைப்படம்

இதையெல்லாம் பார்க்கும் போது அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் லோகேஷ் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இவருக்கு முன்னதாக தமிழ் சினிமாவில் நுழைந்து மிகப் பிரம்மாண்டமான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கூட இந்த அளவுக்கு சம்பளம் வாங்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

இந்தியாவிலேயே இந்த அளவிற்கு சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் அதுவும் தமிழ் சினிமாவின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒருவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் இவரின் முயற்சிக்கும் மற்றும் இவரின் திறமைக்கும் கிடைத்த பெரிய ஜாக்பாட் என்றே சொல்லலாம்.

Also read: அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய 9 பான் இந்தியா படங்கள்.. லியோ உடன் போட்டி போடும் சூர்யா

Trending News