சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

லோகேஷ் பெயரை கெடுக்க இப்படி ஒரு மட்டமான வேலையா.? அத தூக்கி குப்பைல போடுங்க

Lokesh kanagaraj massive reply to his fake facebook id: சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் அடிமட்டத்தில் இருந்து ஒருவன் முன்னுக்கு வருவது என்பது கடினமான ஒன்று. அந்த துறையில் அதற்கு முன்னால் கோல்ஊன்றியவர்கள் இந்த எழுச்சியை அனுமதிப்பதில்லை. நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி மேலே வந்தவனை அதே வேகத்தில் திருப்பி அடிக்கும் கலையை நன்கு உணர்ந்து வைத்துள்ளனர் நயவஞ்சகர்கள்.

மாநகரப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் சிறந்த கதை அம்சத்துடன் ஆக்சன் திரில்லராக தனக்கென தனி ஒரு சினிமா பாணியை வைத்திருக்கும் அவர் தொடர்ந்து கைதி, விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களையே கொடுத்து வருகிறார்.

தற்போது சமீபத்தில் ஜி ஸ்கொயர்டு என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பைட் கிளப் என்ற படத்தையும் தயாரித்து உள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷனில் பிஸியாகி உள்ளார் லோகேஷ்.

Also read: பல பேரோட சாவ வச்சு சம்பாதிச்சதுல சக்ஸஸ் மீட்டா.? லோகேஷ் ஹீரோவின் நிஜ முகம்

இந்நிலையில் லோகேஷ் இன் நற்பெயரை கெடுக்கும் வண்ணம் அவரின் புகைப்படத்துடன் லோகேஷ் பேஸ்புக் பேஜ் என்று  கணக்கு தொடங்கி  அதில் தவறான புகைப்படங்களை பதிவிட்டு உள்ளனர் சில தரித்திரபேர்வழிகள். இதனை அறிந்த லோகேஷ் அதிர்ச்சியாகி உள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ்  வலைதளத்தில் பதிலளித்த லோகேஷ் அவருக்கு பேஸ்புக் கிடையாது என்றும்  இன்ஸ்டா மற்றும் எக்ஸ் வலைதளத்தை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் பேஸ்புக்கில்  உள்ள தவறான கணக்கை யாரும் பின் தொடர் தர வேண்டாம் எனவும் கேட்டு உள்ளார்.

மேலும் முகம் தெரியா முக்காட்டு புள்ளிகளுக்கு, என் பெயரை பயன்படுத்தி உதவி செய்யுங்கள், முடியவில்லை என்றால் என்னை வந்து பாருங்கள் என்று காட்டமாக தாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Also read: முதலாளியாக வெற்றி பெறுவாரா லோகேஷ்.? வெளிவந்த ஃபைட் கிளப் ப்ரிவ்யூ ஷோ ட்விட்டர் விமர்சனம்

Trending News