ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சும்மா நிறுத்து, இந்த படமெல்லாம் என்கிட்ட வேணாம்.. பொங்கிய திரௌபதி இயக்குனர் மோகன்

இந்த ஜாதி பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மறந்தாலும் இந்த சினிமாக்காரர்களும் சினிமா ரசிகர்களும் அல்லது ஒரு சில அரசியல் விமர்சகர்களும் பேசாமல் இருந்தாலே போதும். ஒருவர் ஏதாவது ஒரு கேள்வி கேட்க ஏதாவது ஒரு வில்லங்கமான பதில் சொல்ல பிரச்சினை உருவாகிறது. இதை சரிகட்ட ஒரே வழி எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருப்பதுதான்.

இன்று ட்விட்டரில் ஒருவர் திரௌபதி பட இயக்குனர் மோகனிடம் ஒரு கேள்வி கேட்டார் அதாவது ‘சாதி பெருமை பேசாமல் இருப்பதை நான் பெருமிதம் கொள்கிறேன் என்று சொல்லுங்களேன்’ என்று. இதற்கு மனுஷன் பொங்கியே விட்டார்.

cinemapettai1
cinemapettai1

‘அடுத்தவன் கொள்கைய பற்றியே சிந்திப்பது தவறு.. உங்கள் குடும்பத்தை, உங்கள் நண்பர்களை சாதி பெருமை கொள்வதை நிறுத்து.. முதலில் நீ நீறுத்து முடிந்தால். இது ஜனநாயக நாடு.. என் உரிமை. சாதியை தூக்கி எறிவதால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. மற்றவர் போல சும்மா படமெல்லாம் காட்ட முடியாது.

பல பேர் கொண்ட கூட்டம் ஒன்னு ட்விட்டர்ல என்னையே சுற்றி சுற்றி வர்றாங்க.. எதை பற்றி பதிவு போட்டாலும் சாதிய தூக்கின்னு வந்துடுவானுங்க.. ஆனா அவனுங்களுக்கு சாதி பற்றே இல்லன்னு கத வேற உடுவானுங்க.. உங்க அக்கா சாதி வேணாம்னு சொன்ன அவங்கள கொண்டாடுங்க.. என்ன உட்ருங்கடா எப்பா.. முடியல’ என்று என்ன கோவத்தில் இருந்தாரோ மொத்தமாக பொங்கி விட்டார். என்று என்ன கோவத்தில் இருந்தாரோ மொத்தமாக பொங்கி விட்டார்.

mohan-director
mohan-director

இந்த ட்விட்டரில் இருப்பவர்களையும் சும்மா சொல்லக்கூடாது அவர்களும் நல்லா வாங்கி கட்டிக் கொள்வது போலத்தான் கேள்வியும் கேட்பார்கள். இன்னும் சிலர் லாக்டோன் என்டர்டைன்மென்ட் போல ஜாலி பண்ணுவதற்காக வெறுப்பு ஏத்துற மாதிரி கேள்வி கேட்பார்கள்.

அதேபோல் இன்று ஒருவர் சிக்கி விட்டார் இதற்குப் பிறகு வரும் கமெண்ட்டுகள், கேள்விகளும் பதில்களும் வேற மாதிரி சென்று கொண்டிருக்கும். அதனால் இதன் முடிவு எங்கே எப்போது யாருக்கும் தெரியாது. இந்த ஜாதி சண்டை இருக்கும் வரை சில பிரபலங்களுக்கும் ட்விட்டர் கம்பெனிக்கும் நல்ல லாபம்.

Trending News