வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உங்க வாயினா எதுனாலும் பேசுவீங்களா.. உதயநிதியை வச்சிக்கிட்டு மேடையில் கடுப்பேற்றிய மிஸ்கின்

இயக்குனர் மிஸ்கின் தன்னுடைய எதார்த்தமான கதைக்களத்தினால் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர். இவருடைய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றன. ஆனால் மிஸ்கின் எதார்த்தமாக பேசுகின்றேன் என்ற பெயரில் ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்குவதோடு, மற்றவர்களின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குனர் மிஸ்கினும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் வழக்கம் போல் தன்னுடைய இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்து விட்டார். இவரது பேச்சு அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Also Read: கமலஹாசனுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான்தான் காரணம்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட உதயநிதி

இயக்குனர் மிஸ்கின் உதயநிதியை வைத்து ‘சைக்கோ’ என்னும் படத்தை இயக்கினார். இதில் உதயநிதி பார்வையற்றவராக நடித்திருப்பார். இந்த படம் உதயநிதியை ஒரு நல்ல நடிகர் என்று கோலிவுட்டில் அடையாளப்படுத்தியது. இதனால் உதயநிதிக்கு மிஸ்கின் மேல் ஒரு நல்ல மரியாதையும், நட்பும் உண்டு. ஆனால் அதை வைத்துக் கொண்டு என்ன வேணாலும் பேசிவிடலாம் என்று நினைப்பது கொஞ்சம் ஓவர்.

மேடையில் பேசிய அவர் இயக்குனர் ராஜேஷை குப்பை படம் எடுக்கும் இயக்குனர் என்று சொல்லி உதாசீனப்படுத்தினார். இயக்குனர் ராஜேஷ் தான் உதயநிதியை கோலிவுட்டில் ஹீரோ ஆக்கியது. அவரது ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் தான் உதயநிதி நடிகரானார். எப்படி பார்த்தாலும் ராஜேஷ் உதயநிதிக்கு சினிமாவில் குரு.

Also Read: மொக்க படத்தை தலையில் கட்டிய ஆர்யா.. உண்மையை வெளியே சொல்லி அசிங்கப்படுத்திய உதயநிதி

உதயநிதி அரசியலுக்கு வந்துவிட்டாலும் இயக்குனர் ராஜேஷுடன் ஒரு நல்ல நட்பை இன்னும் வைத்து கொண்டிருக்கிறார். அவர் முன்னாடியே அவ்ருடைய குருவான ராஜேஷை மிஸ்கின் உதாசீனப்படுத்தியது உதயநிதிக்கே சற்று வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இனி இதுபோன்ற விழாக்களில் மிஸ்கினுக்கு அழைப்பு வருவது கஷ்டம் தான்.

மேலும் ஒரு இயக்குனர் மற்றொரு இயக்குனரை பலரும் இருக்கும் இடத்தில் இப்படி உதாசீனப்படுத்தி பேசுவது எல்லாம் ரொம்பவும் அநாகரீகமான ஒன்று. மிஸ்கினுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அவர் பேசும் ஒவ்வொரு விழாக்களின் போதும் யாராவது ஒருவரை அநாகரிகமாக பேசுகிறார். இனிவரும் நாட்களில் இவர் இது போன்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

Also Read: உதயநிதி ஸ்டாலின் ஹீரோவானதற்கு காரணம் இதுதான்.. நட்சத்திர ஹோட்டலில் நடந்த அவமானம்

Trending News