சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பிரிஞ்சுட்டா அசிங்கப்படுத்தணுமா.? இதுவும் காதல் தான், பெரிய மனுஷன்னு நிரூபித்த மிஸ்கின்

Mysskin: அண்மைக்காலமாகவே திரைத்துறையில் ஏகப்பட்ட விவாகரத்து செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல வருடங்களாக காதலித்து திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் கூட ஒரே நொடியில் பிரிவு என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

சமீபத்தில் கூட ஜெயம் ரவி ஆர்த்தியின் விவாகரத்து செய்தி பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்வதில் ஆரம்பித்து ஏகப்பட்ட விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதை பார்க்கும் போது பிரிஞ்சிட்டா மாத்தி மாத்தி அசிங்கப்படுத்தனும்னு சட்டம் இருக்கா என்ற கேள்விதான் எழுகிறது.. உண்மையில் இரு தரப்பும் இதன் மூலம் தங்கள் காதலை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என ரசிகர்கள் வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர்.

அப்படித்தான் இந்த விவகாரம் நாளுக்கு நாள் புது பூகம்பமாக இருக்கிறது. ஆனால் இதுவும் கூட காதல் தான் என நிரூபிக்கும் வகையில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மிஸ்கின். இவர் அளித்த ஒரு பேட்டியில் தன்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்து பற்றி முதிர்ச்சியுடன் பேசிய இயக்குனர்

அதாவது சினிமா மீது இருந்த அதீத காதலால் இவர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற விரும்பி இருக்கிறார். ஆனால் அவரோ முடியாது என்று மறுத்திருக்கிறார். வேறு யாராவது இருந்தால் கட்டாயப்படுத்தி விவாகரத்து வாங்கி இருப்பார்கள்.

ஆனால் மிஸ்கின் மனைவியின் மனநிலையை புரிந்து கொண்டு தள்ளி இருந்தே வாழலாம் என முடிவெடுத்திருக்கிறார். அதன் பிறகு அவரின் மகள் தான் அம்மா அப்பாவிற்கு இடையே ஒரு பாலமாக இருந்து வருகிறாராம்.

மேலும் மிஸ்கின் தன் மகளிடம் நான் உன்னை கைவிட்டாலும் விட்டு விடுவேன். ஆனால் நீ அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அவர் ஒரு சிறந்த தாய் என கூறி இருக்கிறார். உண்மையில் இதுதான் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல்.

குழந்தைக்காக எதற்காக சகித்துக் கொள்ள வேண்டும் என விவாகரத்து தேடும் தம்பதிகள் மத்தியில் என்ன மனுஷன்பா என ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் மிஸ்கின். இவர் கொஞ்சம் கரடு முரடாக தெரிந்தாலும் இவருடைய பேச்சில் இருக்கும் முதிர்ச்சியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

பெரிய மனுசனாக வியக்க வைத்த மிஸ்கின்

Trending News