செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

லோகேஷை பார்த்து மிரண்டு போன சைக்கோ இயக்குனர்.. மொத்த கோடம்பாக்கத்துக்கும் போட்ட பக்கா ஸ்கெட்ச்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜம்மு காஷ்மீரில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக 50 பேர் கொண்ட பட குழு ஜம்மு காஷ்மீரில் தங்கி இருந்து இரவும் பகலுமாக வேலை செய்து வருகின்றனர்.

லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரை பொறுத்த வரைக்கும் வெயில் காலத்தில் அங்கு குளிர் வாட்டி வதைக்கும். இந்நிலையில் படக்குழு சென்று இருப்பது கடுமையான பனிக்காலம் என்பதால் அங்கு மைனஸ் டிகிரியில் வெப்பநிலை இருக்கிறது. கடும் குளிரால் ஜம்மு காஷ்மீர் சென்ற இரண்டு மூன்று நாட்களிலேயே த்ரிஷா சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Also Read: வெறும் பெயரை வைத்து மட்டுமே விளையாடும் லோகேஷ்.. லியோ படத்திலிருந்து வெளிவந்த ரகசியம்

இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கினும் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். மிஷ்கின், படக்குழு முதலில் செல்லும் போது அவர்களுடன் ஜம்மு காஷ்மீருக்கு போகவில்லை. அதன் பிறகு தான் அவர் சென்றிருக்கிறார். இங்கிருந்து கிளம்பும் போதே மிஷ்கினுக்கு படப்பிடிப்பில் என்ன நடக்கும் என்று குழப்பமாகவே இருந்ததாம்.

இவ்வளவு குளிர் ஜம்மு காஷ்மீரில் இருக்கும்பொழுது இவர்கள் எல்லோரும் அங்கு தாக்குப் பிடிப்பார்களா, நமக்கான செட்யூலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சரியாக முடித்துக் கொடுப்பாரா என்ற பல கேள்விகள் மிஸ்கினுக்கு இருந்ததாம். ஆனால் அவர் நினைத்தது போல் லோகேஷ் கனகராஜ் இல்லையாம்.

Also Read: டைட்டில வச்சே பல நூறு கோடி கல்லா கட்டிய லோகேஷின் லியோ.. இந்திய அளவில் எதிர்பார்க்கும் மொத்த வசூல்

ஆனால் அந்த குளிரிலும் லோகேஷ் கனகராஜ் பக்காவாக பிளான் பண்ணி கொடுத்த செட்யூலுக்கு முன்னதாகவே மிஷ்கினின் போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டாராம். மிஸ்கினுக்கு மட்டுமல்லாமல் படத்தில் இருக்கும் அத்தனை நடிகர்களின் செட்யூலையும் பக்காவாக பிளான் போட்டு முடித்துக் கொடுக்கிறாராம் லோகேஷ்.

லோகேஷின் இந்த திறமையை பார்த்து மிரண்டு போய்விட்டாராம் இயக்குனர் மிஷ்கின். படப்பிடிப்பு கரெக்டாக நடக்க வேண்டும் என்பதற்கு பக்கமாக ஸ்கெட்ச் போட்டு எல்லாவற்றையும் செய்து வருகிறாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இது குறித்து நேற்று மிஸ்கின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவையும் போட்டிருந்தார்.

Also Read: உறைய வைக்கும் பனியில் உழைக்கும் லியோ டீம்.. காஷ்மீருக்கு கும்பிடு போட்டு வந்த மிஷ்கின் அறிக்கை

- Advertisement -spot_img

Trending News