வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆணவ பேச்சால் பெயரைக் கெடுத்துக் கொண்ட மிஷ்கின்.. மைக்க பிடிச்சாலே சர்ச்சை தான்!

அஞ்சாதே, பிசாசு உள்ளிட்ட மிரட்டலான திரைப்படங்களை கொடுத்திருக்கும் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மிஸ்கின் பேசிய ஒரு பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இவர் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதி சினிமாவில் டீம் வொர்க் இல்லை என்றும், நான் தான் சினிமா அதாவது டைரக்டர் தான் சினிமா என்றும் தெனாவட்டாக பேசியுள்ளார். இயக்குனர் இல்லாமல் சினிமா கிடையாது என்று கூறியிருக்கும் மிஷ்கின் பிரபலங்களையும் வம்பிழுக்கும் விதமாக பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ஒரு படத்தில் நான் இளையராஜாவுடன் வேலை செய்யும் போது இளையராஜா இந்த பாடகர் தான் பாட வேண்டும் என்று எனக்கு ஆர்டர் போட்டார். உடனே நான் முடியாது என்று கூறி வேறு ஒரு பாடகரை பாட வைத்தேன்.

அதேபோன்று ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராமும் நிறைய பிரச்சினை பண்ணினார். அவரிடமும் நான் மாட்டேன் என்று தான் கூறினேன். அது மட்டுமல்லாமல் கார்த்திக் ராஜா தப்பு தப்பாக டியூன் போட்டார் உடனே நான் அவரை மாற்றி விட்டேன் என்று பிரபலங்களை பற்றி பல விஷயங்களை அடித்து விட்டுள்ளார்.

பொதுவாகவே மிஸ்கின் பேசும் பேச்சு பல பிரச்சனைகளை கிளப்பும் அதேபோன்று பல பிரபலங்களுடன் இவருக்கு மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறது. துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் கூட விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி போகுமிடமெல்லாம் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும் மிஷ்கின் தற்போது சினிமாவையே இவர்தான் கண்டுபிடித்தது போல் பேசி இருப்பது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மேலும் இவர் பேசி இருக்கும் இந்த பேச்சு சம்பந்தப்பட்ட பிரபலங்களை கொதிப்படைய வைத்துள்ளது.

Trending News