Nelson: டாப் ஹீரோக்களின் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வளர்ச்சி அடைந்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா என்ற பிளாக்பஸ்டர் படம் தான் இவருக்கான அடையாளம்.
ஆனால் அதற்கு முன்பே இவர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்க இருந்தார். சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை இயக்கி வந்தார்.
அப்போது அவருக்கு அடித்த அதிர்ஷ்டம் தான் கோலமாவு கோகிலா. அந்த படம் மிக பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்த 2021 ஆம் ஆண்டு டாக்டர் படத்தை இயக்கினார்.
அப்படம் 100 கோடி வரை வசூலித்து ஒட்டு மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது. அதற்கு அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதனால் நெல்சன் இன்னும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார்.
40வது பிறந்த நாள் கொண்டாடும் நெல்சன்
ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு கொஞ்சம் சொதப்பிய நிலையில் நெல்சனுக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தது. அதன் மூலம் அவர் பட்ட அவமானங்களும் கொஞ்சம் நெஞ்சம் கிடையாது. அதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தை வெறியோடு இயக்கினார்.
கிட்டத்தட்ட 650 கோடி வரை வசூலித்த அப்படம் நெல்சனை மீண்டும் தூக்கி நிறுத்தியது. அதை தொடர்ந்து அவருடைய அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு அனைவரும் வாழ்த்து சொல்லி வரும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது. அதன்படி ஜெயிலர் பட வெற்றியின் போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்திருந்தார்கள்.
அதேபோல் பீஸ்ட் படத்திற்காக இவருக்கு 8 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் காக 12 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இப்படி வளர்ந்து வரும் நெல்சனின் தற்போதைய சொத்து மதிப்பு 20 இலிருந்து 25 கோடியாக இருக்கிறது.
அது மட்டும் இன்றி தற்போது இவர் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். கவினை வைத்து இவர் ப்ளடி பெக்கர் என்ற படத்தை தயாரிக்கிறார். இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் நெல்சன் மேலும் மேலும் வளர வேண்டும் என்ற வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
ஜெயிலர் வரை நெல்சன் சேர்த்து வைத்த சொத்து மதிப்பு
- வாயை பிளக்க வைக்கும் நெல்சன், லோகேஷ் சம்பளம்
- Nelson Dilipkumar : ஜெயிலர் 2 சம்பளம் பத்தலையா.?
- Vijay TV : நெல்சன் தயாரிப்பில் முதல் ஹீரோ யார் தெரியுமா.?