Actor Kamal: பொதுவாகவே சினிமாவில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பவான்களை தான் தங்களுடைய ரோல் மாடலாக வைத்து வருகின்றனர். அதில் ரஜினிக்கு ஒரு விதமான ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. அதேபோன்று கமல் மேல் தீவிர வெறியர்களாக இருக்கும் பிரபலங்களும் இருக்கின்றனர்.
அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் ஆகியோர் தங்களை தீவிர கமல் ரசிகன் என்று பெருமையுடன் சொல்லி வருகின்றனர். இந்த சூழலில் 2018 என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த ஜூட் ஆண்டனி ஜோசப் கமலை சந்தித்தது பற்றிய தன்னுடைய அனுபவத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Also read: உலக நாயகனோடு சம்பவம் செய்ய போகும் விக்னேஷ் சிவன்.. மயிலு மகளை தூக்கிவிடும் கமல்
கேரளாவையே புரட்டி போட்ட உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 2018 திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் சக்கை போடு போட்டது. அந்த வகையில் 160 கோடி வரை வசூலித்திருக்கும் இப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனாலேயே இயக்குனரின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் கமலை சந்தித்த போட்டோவை வெளியிட்டு சிறு வயதிலிருந்தே இவருடைய மேஜிக்கை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அவர் சினிமாவின் என்சைக்கிளோபீடியா என புகழ்ந்துள்ளார்.
மேலும் நிஜ வாழ்விலும் சரி சினிமாவிலும் சரி அவருடைய மேஜிக் என்னை எப்போதுமே பிரம்மிக்க வைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைகளுக்கு இவர் தான் முன்னோடி. அவரை நேரில் சந்திக்கும் அந்த நிமிஷம் நான் மிரண்டு போய் விட்டேன் என்று தாறுமாறாக புகழ்ந்து பேசி இருக்கிறார்.
அது மட்டும் இன்றி அந்த தருணம் எனக்கு உணர்ச்சிபூர்வமாகவும், அதிர்ஷ்டமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி கொண்டு இருக்கிறது. மேலும் இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
கமலை சந்தித்த ஜூட் ஆண்டனி ஜோசப்
