வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலுடன் கூட்டணி சேர்ந்த அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்.. கைமாறிய பல கோடி பணம்

பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 என்று நிற்பதற்கு கூட நேரமில்லாமல் கமல் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாக அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்த ஆண்டவர் விக்ரம் திரைப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றியால் அடுத்தடுத்த பாய்ச்சலுக்காக தயாராகி வருகிறார்.

அதில் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் கமல் தற்போது பல முன்னணி ஹீரோக்களையும், இயக்குனர்களையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருகிறார். அதில் லேட்டஸ்ட் ஆக கமலுடன் பிரபல இயக்குனர் ஒருவர் கூட்டணி அமைத்துள்ளார்.

Also read:பஞ்ச் டயலாக்கால் மோதிக்கொண்ட அஜித், விஜய்யின் 5 படங்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவரும் வாரிசு VS துணிவு

ஏற்கனவே இரண்டு இயக்குனர்களுக்கு வலையைப் போட்ட கமல் தற்போது அஜித்தின் ஆஸ்தான இயக்குனருக்கும் வலையை போட்டு பிடித்திருக்கிறார். அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹெச் வினோத் தற்போது மீண்டும் அஜித்தை வைத்து துணிவு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தத் திரைப்படம் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வாரிசு திரைப்படத்துடன் வரும் பொங்கலுக்கு நேரடியாக மோத இருக்கிறது. இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வினோத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் கமல் தங்கள் நிறுவனத்திற்காக படம் இயக்க அவருக்கு பல கோடி பணத்தை அட்வான்சாக கொடுத்திருக்கிறார்.

Also read:தலைகணத்தில் தலைகால் புரியாமல் ஆடும் போட்டியாளர்.. குட்டு வைக்க போகும் பிக்பாஸ்

அது மட்டுமல்லாமல் ஏற்கனவே உறுதி செய்து வைத்திருந்த இரண்டு இயக்குனர்களுக்கும் சேர்த்து பெட்டி பெட்டியாக பணம் கை மாறி இருக்கிறதாம். அந்த வகையில் இவர்களை வைத்து பல திட்டங்களை போட்டு வரும் கமல் அடுத்தடுத்து பல திரைப்படங்களை தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் தற்போது திரையுலகின் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் அந்த பட வேலைகளை முடித்துவிட்டு கூடிய விரைவில் தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களை பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read:அதிரடி அவதாரத்தில் இருக்கும் இயக்குனர் ஷங்கர்.. ஆடிப்போன ஆண்டவர்!

Trending News