பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் நடித்த படம் டேக் ஆப். இப்படம் மூலம் மகேஷ் நாராயணன் இயக்குனராக அறிமுகமானார். மீண்டும் பகத்பாசில் நடிப்பில் மாலிக், C U Soon உள்ளிட்ட படங்களை அவர் இயக்கினார்.
கமல்ஹாசன் நடிப்பில் புதிய படத்தை மகேஷ் இயக்குவதாக தகவல் வெளியானது. தற்போது அவர் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் பஹத் பாசில், குஞ்சாக்கோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
கமல் படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுப்பேன் – மகேஷ் நாராயணன்
இப்படம் கமல் நடிக்க வேண்டிய கதையா? என சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து கூறிய மகேஷ், கமல் படத்தை இயக்குவதன் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுப்பேன். அப்படத்தின் கதையை மோகன்லால், மம்முட்டி படத்துக்கு பயன்படுத்தவில்லை.
இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இதில் முழு நீள படத்தில் நடிக்கிறார்கள். பஹத் பாசில், குஞ்சாக்கோவை சும்மா பயன்படுத்தவில்லை. முக்கிய ரோலில் இருவரும் நடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.