சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பொன்னியின் செல்வன், பாகுபலியை மிஞ்ச வரும் வரலாறு.. கனவை நினைவாக்க வரும் இயக்குனர்

Ponniyin Selvan: பொதுவாக வரலாற்று காவியங்களுக்கு நம்ம ரசிகர்கள் எப்போதுமே தங்கள் ஆதரவை அள்ளிக் கொடுப்பார்கள். அதன் காரணமாகவே பாகுபலி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்டு வசூல் வேட்டை நிகழ்த்தியது.

தற்போது அதையே மிஞ்சும் வகையில் ஒரு வரலாற்று காவியம் தயாராக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இதுதான் பிரம்மாண்டம் என்று வியக்க வைக்கும் அளவுக்கு ஒரு தரமான வரலாற்றுடன் களமிறங்க இருக்கிறார் இயக்குனர் சங்கர்.

Also read: ஜோடி போட்டு அமெரிக்கா பறக்கும் ரெண்டு பேர்.. 3னே நாளில் ஷங்கரை கழட்டி விட்டு கமல் செய்யப் போகும்

கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் பிசியாக இருக்கும் இவர் அதை முடித்துவிட்டு தன்னுடைய கனவு படமான வேள்பாரியை உருவாக்க இருக்கிறாராம். ஏற்கனவே இது குறித்து பல செய்திகள் வெளி வந்தாலும் தற்போது ஷங்கர் இதை முழுமூச்சாக உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் நம் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தும் வகையில் இந்த படைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பாரி கதாபாத்திரத்தில் டாப் ஹீரோ ஒருவரை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று சங்கர் முடிவு செய்துள்ளார். அதில் சூர்யா, விஜய் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருக்கிறது.

Also read: 10 வருடத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டாருக்கு நடந்த அதே சம்பவம்.. இப்போது பனையூரிலும் விஜய்க்கு நிகழ்ந்திருக்கிறது

இருப்பினும் இந்த காவியம் திரைப்படமாக உருவாவதற்கு அதிக கால தாமதம் ஏற்படும். பொதுவாகவே சங்கர் தன்னுடைய படங்களை மிகவும் கவனமாக படமாக்குவார். அதனாலயே வருட கணக்கில் சில படங்கள் நீண்ட கதையும் உண்டு. அந்த அளவுக்கு அவருடைய பிரம்மாண்டம் திரையில் தெரியும்.

அப்படி இருக்கும்போது இந்த வரலாற்று காவியம் அவருடைய கனவு திரைப்படம். அதனால் சிறிது தாமதம் ஆனாலும் அடுத்த வருடத்திற்குள் படத்தை ஆரம்பிக்கும் முடிவில் அவர் இருக்கிறாராம். அந்த வகையில் பாகுபலியை பார்த்தே மிரண்டு போன ரசிகர்கள் வேள்பாரியை பார்த்து அசந்து போவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு சங்கர் பக்கா திட்டம் போட்டு களமிறங்க இருக்கிறார்.

Also read: கமல், ரஜினி எல்லாம் ஹீரோவே இல்ல.. ஸ்டார் நடிகருக்கு சப்போர்ட் செய்து வாயை புண்ணாக்கிய தேவயானியின் புருஷன்

Trending News