புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தயாரிப்பாளருக்கு தண்ணி காட்டும் டிவி நடிகர் பட இயக்குனர்.. குரலை உசத்தியத்தால் போயான்னு போயிட்டாராம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் தான் அந்த இயக்குனர். அவர் தற்போது பல இயக்குனர்களை வைத்து ஒரே ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்றிற்காக உருவாகும் அந்த படத்தில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை சேர்ந்த பல முன்னணி இயக்குனர்கள் அதில் ஆளுக்கொரு பகுதியை இயக்கி வருகின்றனர். இவ்வளவு ஏன் அந்த படத்தில் தமிழ் சினிமாவின் சில முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

அந்த ஆந்தாலஜி படமாக உருவாகும் அந்த படத்தில் ஒரு காமெடி கதையை வைத்து ஒரு போர்ஷனை இயக்கி வந்தாராம் அந்த டிவி நடிகர் பட இயக்குனர். மற்ற இயக்குனர்களின் படங்களுக்கு இந்த இயக்குனர் இயக்கிய படத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையாம். மொத்த படத்தையும் கெடுக்கும் அளவுக்கு இவரது குறும்படம் இருந்ததாக கூறுகின்றனர்.

சிலநாள் இயக்கிய வரை போட்டு பார்த்த அதன் தயாரிப்பாளர் அந்த டிவி நடிகர் பட இயக்குனரை அழைத்து டோஸ் விட்டுள்ளார். இதனால் கடுப்பான அந்த இயக்குனர் போயா நீயும் உன் படமும் என கம்பிநீட்டி விட்டாராம்.

அதனைத் தொடர்ந்து தற்போது பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முன்னணி நடிகரின் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். காமெடி கமர்ஷியல் படங்களுக்கு பெயர் போன அந்த இயக்குனரை தேவையில்லாமல் திட்டி விட்டோமோ என அந்த தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.

மேலும் எவ்வளவோ பேசிப் பார்த்தும் அந்த இயக்குனர் திரும்ப வர முடியாது எனக் கூறி விட்டாராம். ஒருவரால் மொத்த படமும் அப்படியே நிற்கிறது. தற்போது அந்த படத்தின் கதையை வேறு ஒருவரை வைத்து இயக்கலாம் என இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறாராம் அந்த தயாரிப்பாளர். பேசாம அவரே இயக்கிடலாம், அவரும் ஒரு பெரிய இயக்குனர் தானே.

Trending News