திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமல்ஹாசனுக்கு ஆண்மை, தைரியம் ஜாஸ்தி உண்டு.. மறைமுகமாக யாரை குத்திக் காட்டுகிறார் பார்த்திபன்?

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரபலம் ஒருவர் கமலை பற்றி விமர்சிப்பதாக நினைத்து மறைமுகமாக டாப் நடிகரை குத்தி காட்டியிருக்கிறார். சமகால திரை பிரபலம் கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது அதிர்ச்சியாகவே உள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்னும் கட்சியை தொடங்கினார். கமல் தன்னுடைய கட்சியை மதுரையில் தொடங்கினார். அந்த தொடக்க விழாவிற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தது குறிப்பிடதக்கது.

Also Read: கமல் கேரியரில் நடித்த ஒரே ஒரு மோசமான படம்.. இயக்குனருக்கு உதவ நினைத்ததால் ஏற்பட்ட சங்கடம்

இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் பேசிய பேட்டி ஒன்றில் கமல்ஹாசனை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். கமல் தனக்கு ஒரு மிகப்பெரிய இன்ஸபிரேசன் என்று கூறிய அவர், கமலின் பட டயலாக்குகளை மனப்பாடம் செய்து பேசியே சினிமாவில் முயற்சி செய்ததாக கூறினார்.

மேலும் கமலின் அரசியல் பிரவேசத்தை பற்றி பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், ஆண்மையோடும் தைரியத்தோடும் தேர்தலை எதிர் கொண்டவர் கமல் என்றும், ஓட்டு எண்ணிக்கையை பற்றி கவலை படாமல், அவர் தேர்தலில் போட்டியிட்டார் என்றும் அவர் தோற்ற போது தான் அழுது விட்டதாகவும் கூறினார்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 உறுதியான 11 போட்டியாளர்கள்.. ஏஜெண்ட் விக்ரமுக்கு இவ்வளோ கோடி சம்பளமா?

கமல் மீது தனக்கு எப்போதும் நீங்காத அன்பு இருப்பதாகவும், அது எப்போதுமே மாறாது என்றும் பார்த்திபன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். கமல் அரசியலுக்கு வருவார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை. கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு தனித்து நின்று தேர்தல் களம் கண்டவர் என்றால் அது கமல் தான்.

சில ஸ்டார் நடிகர்கள் அரசியலுக்கு வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அரசியல் பிரவேசம் என்பது நமத்து போன பட்டாசாக ஆகிவிட்டது. இந்நிலையில் பார்த்திபன் மறைமுகமாக பெரிய தலையை குத்தி காட்டுவது போல் பேசி இருக்கிறார்.

Also Read: ரஜினியை விட ஐந்து மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கிய கமல்.. எந்த படத்தில் தெரியுமா?

Trending News