புதன்கிழமை, ஜனவரி 1, 2025

கே ஜி எஃப் நடிகரை வளைத்து போட்ட கார்த்தி பட இயக்குனர்.. வாயைப் பிளக்கும் கோலிவுட் பிரபலங்கள்.!

ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது கே ஜி எஃப்  தான். இந்த படம் கன்னடத்தில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்திய மொழி அத்தனையிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதோடு கோடி கணக்கில் வசூலும் செய்தது.

இந்த படம் ரிலீஸ் ஆகி நான்கு வருடங்கள் மேலாகியும் இன்னும் கூட ஹைப் குறையாமல் இருக்கும் நேரத்தில், கே ஜி எஃப்பின் முக்கிய நடிகர் ஒருவரை தன்னுடைய படத்தில் புக் செய்து இருக்கிறார் தமிழ் பட இயக்குனர் ஒருவர். இது ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா உலகையும் வாயை பிளக்க செய்திருக்கிறது.

Also Read: யாருமே எதிர்பார்க்காததை நடத்தி காட்டும் சர்தார்.. கார்த்திக்கு கொட்டும் பணமழை

தமிழில் நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் தான் இயக்குனர் பி எஸ் மித்ரன். இவர் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ மற்றும் நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் திரைப்படத்தை இயக்கினார். கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

மித்ரன் தற்போது லாக் செய்து இருக்கும் கே ஜி எஃப் பட நடிகர் யாஷ் தான். நடிகர் யாஷ் கன்னட சினிமாவின் ஹீரோவாக இருந்தாலும் கே ஜி எஃப் திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களுக்கும் பிடித்தமான ஹீரோவாக மாறிவிட்டார். இவர் அடுத்து என்ன படம் பண்ண போகிறார் என்பது அனைவரது எதிர்பார்ப்புமாக இருக்க தற்போது யாஷ் மித்ரனுடன் கைகோர்க்க இருக்கிறார்.

Also Read: கார்த்தியின் கேரியரை சறுக்கலில் தள்ளிய 5 படங்கள்.. சர்தார் வரை துரத்திய பிரச்சனை

இயக்குனர் மித்ரன் நடிகர் யாஷிற்கு கதை சொல்லி ஓகே வாங்கி விட்டாராம். பிரெஸ்டிஜ் குரூப் தயாரிப்பு ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்களாம். மித்ரன் இயக்கத்தில் யாஷ் நடிக்கவிருக்கும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறதாம். தமிழ் பட இயக்குனர் மித்ரன், நடிகர் யாஷை வளைத்து போட்டிருப்பது தென்னிந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய இயக்குனர்களை வாயை பிளக்க செய்திருக்கிறது.

நடிகர் அஜித்தின் 62வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற லிஸ்டில் இயக்குனர் மித்ரன் பெயரும் அடிபட்டது. தற்போது மித்ரன், அஜித்துக்கு கதை சொல்ல போவது இல்லை என்ற தகவலும் உறுதியாகி இருக்கிறது. மித்ரன்-யாஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

Also Read: கார்த்தி அடுத்தடுத்த எடுக்கப்போகும் மூன்று அவதாரங்களின் 2ம் பாகம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய சர்தார்-2

Trending News