தமிழ் சினிமாவில் உயரம் முக்கியமில்லை திறமை தான் முக்கியம் என்பதை ஆணித்தனமாக நிரூபித்தவர்தான் நடிகர் மற்றும் இயக்குனர் R. பாண்டியராஜன். இவரது இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் காமெடியை மையப்படுத்தி வந்து செம ஹிட் அடித்தது. அதில் இந்த நான்கு படங்களும் மிக முக்கியமாக அனைவரும் பார்க்க வேண்டியவை.
ஆண் பாவம்:

ஆண்பாவம் படத்தை பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு தனது முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்தவர். இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். அண்ணன் தம்பி கதையில் வித்தியாசமாக வந்து வசூலை வாரிக் குவித்த படம்.
கன்னி ராசி:

பிரபுவை வைத்து ஆர் பாண்டியராஜன் இயக்கிய திரைப்படம். இன்றளவும் இந்த படத்தை ரசிக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகிய இந்த படம் செம ஹிட் அடித்தது.
மனைவி ரெடி:

பாண்டியராஜன் எழுதி இயக்கி நடித்திருந்த இந்தப் படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் அன்றைய கால இளைஞர்களை பெரிதும் கொண்டாட வைத்த திரைப்படம். நண்பரின் திருமணத்திற்கு சென்று வழியில்லாமல் நண்பனின் தங்கையை திருமணம் செய்து இவர் படும்பாட்டை நகைச்சுவை பாணியில் வெளியானதால் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நெத்தியடி:

பாண்டியராஜன், அமலா, ஜனகராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளங்களை கொண்டு உருவான படம்தான் நெத்தியடி. இந்த படத்தில் பணக்காரர்களுக்கு எதிராக சர்காசம் செய்வதைப்போல கதையை அமைத்து நகைச்சுவை கலந்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்தார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.