வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மீண்டும் மல்டி ஸ்டார் படங்களை இயக்க முடியும்.. நம்பிக்கை தெரிவித்த ராஜமவுலி.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று கருதப்படும் ஷங்கர் போல் தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ராஜமௌலி. இவருடைய இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது.

அதைத் தொடர்ந்து அவரின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை பெற்று இந்திய சினிமாவை பெருமைப்படுத்தியது. தற்போது இவரின் இயக்கத்தில் வெளியாக உள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

Rajamouli1-Cinemapettai-1.jpg
Rajamouli1-Cinemapettai-1.jpg

மேலும் நீங்கள் மீண்டும் இரண்டு பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவீர்களா என்று பலரும் அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். அதற்கு பதில் அளித்த ராஜமௌலி என்னால் எத்தனை பேரை வேண்டுமானாலும் வைத்து படம் இயக்க முடியும். அதற்கு முதலில் கதை தான் முக்கியம். அதன் பிறகுதான் நடிகர்களை தேர்வு செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார்.

பாகுபலி படத்தை விட இந்த படம் தனக்கு மிகவும் நம்பிக்கையை கொடுத்திருப்பதாகவும் அதனால் பெரிய நடிகர்களை ஒன்றாக இணைத்து படமெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்து ராஜமௌலி, நடிகர் மகேஷ்பாபுவை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Trending News