வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கடுப்பேத்திய ரிப்போர்ட்டர்.. சுதாரித்து பதிலடி கொடுத்த ராஜமவுலி

சினிமா உலகில் அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சியில் இருப்பவர் இயக்குனர் ராஜமௌலி. இவருடைய அடுத்த படம் எந்த மாதிரி இருக்கும் என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஜனவரியில் திரைக்கு வர இருக்கிறது. அதனால் படக்குழு இப்போதிலிருந்தே படத்தின் பிரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது.

அப்போது இயக்குனர் ராஜமவுலியிடம் இவ்வளவு பணம் செலவு செய்து படம் எடுக்கிறீர்கள் ஏன் ஹாலிவுட் ஹீரோவை வைத்து படம் இயக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வியால் இயக்குனர் ராஜமவுலி சற்று கோபம் அடைந்தார்.

இங்கு உள்ள ஹீரோக்கள் அனைவருக்குமே திறமை இருக்கிறது. அவர்களை வைத்து என்னால் ஹாலிவுட் தரத்திற்கு படத்தை இயக்க முடியும் என்று காட்டமாக பதில் அளித்துள்ளார். மேலும் நான் கதைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஒருமுறை அவரிடம் மல்டி ஸ்டார் படங்களை வைத்து மீண்டும் படம் இயக்குவீர்களா என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த ராஜமௌலி திரைக்கதை சரியாக அமைந்தால் என்னால் எத்தனை ஹீரோக்களை வேண்டுமானாலும் ஒன்றாக இணைத்து படமெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

இதன் மூலம் ராஜமௌலி தரமான கதையை மட்டும் நம்பி படம் இயக்குகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இவரின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தை திரையில் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Trending News