கோயம்புத்தூரை சொந்த ஊராகக் கொண்டவர் தான் ராம், ஒரு இயக்குனராக ஒரு நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். முதல் படத்திலேயே தனக்கென்று தமிழ் சினிமாவில் இயக்குனர் அங்கீகாரத்தை பெற்றவர்.
பாலுமகேந்திராவின் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்துள்ளார் ராம், இவரின் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்களின் வரிசையை தற்போது பார்க்கலாம்.
கற்றது தமிழ்: ஜீவா, அஞ்சலி, கருணாஸ் நடிப்பில் 2007ல் வெளிவந்த படம் கற்றது தமிழ் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, அனைத்து பாடல்களுக்கும் ஹிட்டானது. ஒரு தமிழ் பட்டதாரி இந்த சமுதாயத்தில் படும் அவமானங்களை மிக தத்ரூபமாக வெளிக் கொண்டு வந்திருப்பார் ராம். இந்தப் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் தட்டிச் சென்றது.
தங்கமீன்கள்: ராம், சாதனா, கிஷோர் போன்ற பிரபலங்கள் நடித்து 2013ல் வெளிவந்த படம் தங்கமீன்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. ஒரு தந்தை, மகளுக்கு இருக்கும் உறவை மிக தத்ரூபமாக வெளிக் கொண்டு வந்திருப்பார். நேஷனல் பிலிம் விழாவில், 3 விருதுகளை தட்டிச் சென்றது. குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனாகும் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பாடல் வரிகள் அமைத்த நா முத்துக்குமார் விருதுகள் வழங்கப்பட்டது. 3 பிலிம்பேர் விருதுகள், 3 சௌத் இந்தியன் இன்டர்நேஷனல் விருதுகள் போன்ற பல விருதுகளையும் தட்டிச் சென்றது.
தரமணி: ஆண்ட்ரியா, வசந்த் ரவி போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2017-ல் வெளிவந்த படம் தரமணி. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நன்றாக. டிராமா மற்றும் திரில்லர் கலந்த தரமணி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
பேரன்பு: மம்புட்டி, சாதனா, அஞ்சலி போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2019-ல் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்ற படம் பேரன்பு. இந்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. மீண்டும் தந்தை மகளுக்கான பாசப் போராட்டத்தை மனதை உருக்கும் கதையாக ராம் இயக்கி இருப்பர்.
இந்தப் படமும் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விருதுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது. நேஷனல் பிலிம் அவார்டு பார் நேஷனல் பிலிம் அவார்டு விருது விழாவில் குழந்தை நட்சத்திரம், பெஸ்ட் லிரிக்ஸ் போன்ற பல விருதுகளையும் தட்டிச் சென்றது.
இப்படி சினிமாவுக்கு என்று தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இயக்குனர்களின் பட்டியலில் ராம்க்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. நடிப்பிலும் தத்ரூபமாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இவர் தமிழ் சினிமாவில் இன்னும் பல வெற்றிகள் பெறுவதற்கு சினிமாபேட்டையின் வாழ்த்துக்கள்.