வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரமேஷ் கண்ணா நடிகர் மட்டும் இல்ல இயக்குனரும் கூட.. அதுவும் அஜித்தை வைத்தே தாறுமாறா எடுத்துருக்காருபா

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக, ஒரு காமெடி நடிகராக, ஒரு குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ரமேஷ்கண்ணா. தனது 5 முதல் 10 வயதில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேலான டிராமாவில் நடித்துள்ளார்.

பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்துள்ளார் ரமேஷ் கண்ணா. தனது சினிமா வாழ்க்கையில் இயக்குனராக எடுத்த படம் மற்றும் சீரியல் தற்போது பார்க்கலாம்.

தொடரும்

அஜித்குமார், தேவயானி,ஹீரா போன்ற பிரபலங்கள் நடிப்பில்இளையராஜாவின் இசையில் 1981ல் வெளிவந்த படம் தொடரும். இந்த படம் கிட்டத்தட்ட 4.4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

ரமேஷ் கண்ணாவின் முதலும் கடைசியுமான இந்த படம் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அந்த சமயத்தில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பயிற்சி இயக்குனராக வேலை பார்த்துள்ளார் ரமேஷ் கண்ணா. இந்த படத்தை வைத்து தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு நன்றாக இருந்தது. காதல் கோட்டை இரண்டாம் பாகமாக எடுத்தார் ஆனால் படம் சுமார் தான்.

அஜித், தேவயானிக்கும் திருமணம் முடிந்த பின்பு, தேவயானி இதயத்தில் நோய் ஏற்பட்டதால் இறந்து விடும் சூழ்நிலையில் ஹீராவை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயகத்துக்கு ஆளாகிறார். பின்னர் தேவயானி இறந்தபின் ஹீராவை திருமணம் செய்து கொள்கிறார்.

டாப் டக்கர் சீரியல்:

1988-ல் சன் டிவியில் டாப்பு டக்கர் என்ற சீரியலை இயக்கியுள்ளார் ரமேஷ் கண்ணா. இந்த சீரியல் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானது, விவேக் இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சன் டிவியின் டிஆர்பி எத்திவிட்ட சீரியல் என்றே கூறலாம்.

இதையும் தாண்டி ரமேஷ்கண்ணா சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஆதவன் படத்திற்கு கதை எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல் முனி, நம்நாடு போன்ற படங்களுக்கு டயலாக் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் திரும்பி பார்க்க வைத்த படம் என்றால் உன்னை நினைத்து, தளபதி விஜயுடன் பிரண்ட்ஸ், தல அஜித்துடன் வில்லன் போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

Trending News