வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தளபதிக்கு கதை கூறிய டைரக்டர் ஆர் ஜே பாலாஜி.. விஜய் சொன்ன பதில்

கம்மி பட்ஜெட் படங்களின் மூலம் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிப்பில் வெளியான எல்கேஜி படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருந்தது. தற்போது ஊர்வசி, சத்யராஜ் ஆகியோரை வைத்து வீட்ல விசேஷம் படத்தை இயக்கி, நடித்துள்ளார். இப்படமும் நல்ல வசூலை ஈட்டி வருவதால் தொடர்ந்த ஹாட்ரிக் வெற்றி அடைந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்ஜே பாலாஜி, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விஜய்யை சந்தித்ததாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது ஜனவரி 27-ஆம் தேதி விஜயிடம் கதை சொல்வதற்கான வாய்ப்பு ஆர் ஜே பாலாஜிக்கு கிடைத்துள்ளது.

மேலும், ஆர்ஜே பாலாஜி இரண்டு மாதங்களாக எழுதிய கதையை கிட்டதட்ட 40 நிமிடங்கள் சொல்லியுள்ளார். உடனே விஜய் மூக்குத்தி அம்மன் ஸ்டைலில் ஃபேமிலி கதையாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஹை ஸ்கேல்ல இருக்கு, ஸ்கிரிப்ட் ரெடியாக எவ்வளவு நாள் ஆகும் எனக் கேட்டுள்ளார்.

நான் ஒரு வருஷம் ஆகும் சார் என சொன்னேன். என்னப்பா ஒரு வருஷம் ஆகுமானு விஜய் சார் ஷாக் ஆயிட்டாரு. நான் இப்ப வீட்ல விசேஷம் என்று ஒரு படத்தை எடுத்துட்டு வரேன். அது ரீமேக் படம்தான் சார். அதுக்கே எனக்கு 5 மாசம் ஆகுது. உங்கள மாதிரி ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்கணும்னா கண்டிப்பா ஒரு வருஷம் வேணும் என ஆர் ஜே பாலாஜி கூறியுள்ளார்.

மேலும், விஜய் எப்ப வேணாலும் வந்து கதையை சொல்லு என கூறினாராம். அதற்கு ஆர்ஜே பாலாஜி ஒன்னும் அவசரம் இல்ல சார் தளபதி 67 இல்லனா, தளபதி 77 அதுவும் இல்லனா தளபதி 87 பண்றேன்னு என எப்போதும் உள்ளது போல அதே கலகலப்பான பேச்சுடன் கூறியுள்ளார். கண்டிப்பாக ஆர் ஜே பாலாஜி, விஜய் கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளது.

Trending News